ஆளுமை:ராஜகோபால், குமாரசாமி
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:10, 5 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ராஜகோபால் |
தந்தை | குமாரசாமி |
பிறப்பு | |
ஊர் | உடுப்பிட்டி |
வகை | ஊடகவியலாளர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராஜகோபால், குமாரசாமி யாழ்ப்பாணம், வல்லுவெட்டுயை சேர்ந்த ஊடகவியலாளர்; எழுத்தாளர். இவரது தந்தை குமாரசாமி. உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, ஸ்கந்தவரோதய கல்லூரிகளில் தமது கல்வியைக் கற்றவர். இளம் பராயத்திலேயே பத்திரிகையாளராகி 'விவேகி' என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியராக பணியாற்றினார். ஈழநாடு, தினகரன் முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் பாமா ராஜகோபால் என்ற பெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.
இவர் ஈழநாடு வார மலரில் தொடராக எழுதிவந்த "வல்வை கப்பல் அமெரிக்க பயணம்" என்னும் தொடரை நூலாக்கி வெளியிட்டுள்ளார். இவற்றுடன் மக்கள் பிரதமர் ஸ்ரீமா, ஆழிக்குமரன் ஆனந்தன் ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 376-377
- நூலக எண்: 4192 பக்கங்கள் 66-67