ஆளுமை:ஜெயராஜ், இலங்கைராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயராஜ்
தந்தை இலங்கைராஜா
தாய் குலமணி
பிறப்பு 1957.10.24
ஊர் நல்லூர்
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயராஜ், இலங்கைராஜா (1957.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த பேச்சாளர். இவரது தந்தை இலங்கைராஜா, இவரது தாய் குலமணி. இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1980 இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவி கம்பன் இலக்கிய விழாக்களை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக வருடந்தோரும் நிகழ்த்தி வருகின்றார்.

1975 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் போர்க்காலச் சூழலிலும் பல்லாயிரக்கணக்கான பிரசங்கங்காளையும் ஆலயங்கள்தோரும் பட்டிமண்டபங்களையும் இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார். 1995இன் பின் கொழும்புக்கு இடம்பெயர்ந்து கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும் நாட்டிய விழாக்களையும் அங்கும் நிகழ்த்தினார். 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் அகில இலங்கை கம்பன் கழகத்தின் பெருந்தலைவராக இருந்துகொண்டு யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக கம்பன் விழாக்களை நடாத்திவருகின்றார். 2005ஆம் ஆண்டு கொழும்பில் கம்பன்கோட்டத்தில் ஐஸ்வரியலட்சுமி கோயிலை நிறுவினார். இவர் அழியா அழகு, பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள், உலகம் யாவையும், மாருதி பேருரைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

கம்பராமாயணத்தில் சிறந்த ஆளுமை உடைய இவருக்கு யாழ்ப்பாணம், திருநெல்வேலி தலங்காவில் ஆலயத்தினர் "கம்பவாரிதி" என்ற பட்டத்தை வழங்கி கெரவித்துள்ளனர்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 228-231