ஆளுமை:சாரல்நாடன், கருப்பையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாரல்நாடன்
தந்தை கருப்பையா
தாய் வீரம்மா
பிறப்பு 1944.05.09
இறப்பு 2014.07.31
ஊர் சாமிமலை, நுவரெலியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாரல்நாடன் (1944.05.09 - 2014.07.31) நுவரெலியா, சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் நல்லையா. இவரது தந்தை கருப்பையா; தாய் வீரம்மா. இவர் அப்கொட் தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் தனது உயர் கல்வியையும் கற்றார். கண்டி அசோக வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்து, பின்னர் ஆசிரியத் தொழிலை விடுத்து தேயிலைத் தோட்ட தொழிற்சாலை அதிகாரியாக பணியாற்றினார்.

இவர் மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் மலையகத் தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலையகம் வளர்த்த தமிழ், மலைய இலக்கியம்: தோற்றமும் வளர்ச்சியும், பேரேட்டில் சில பக்கங்கள், கண்டிராசன் கதை, புதிய இலக்கிய உலகம், சிந்தையள்ளும் சிவனொளிபாதமலை, இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

இவர் புனைவு நூல்களுடன் ஆய்வு நூல்களையும் ஆக்கியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல் வெளியீட்டிலும் ஈடுபட்டுள்ளார். இவர் தேசபக்தன் கோ. நடேசையர் என்ற நூலிற்கு சாகித்திய மண்டல விருது பெற்றுள்ளார். இவர் 2014 ஜூலை 31இல் காலமானார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 62-74
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 190-194
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 67-74