ஆளுமை:வைத்தீஸ்வரக் குருக்கள், கணபதீசுவரக் குருக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைத்தீஸ்வரக் குருக்கள்
தந்தை கணபதீசுவரக் குருக்கள்
தாய் சிவயோக சுந்தரம்பாள்
பிறப்பு 1916.09.22
இறப்பு 2015.04.26
ஊர் காரைநகர்
வகை கல்வியியலாளர், சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தீஸ்வரக் குருக்கள், கணபதீசுவரக் குருக்கள் (1916.09.22 - 2015.04.26) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த கல்வியியலாளர்; சமயப் பெரியார். இவரது தந்தை கணபதீசுவரக் குருக்கள்; தாய் சிவயோக சுந்தரம்பாள். ஆரம்பக் கல்வியை காரைநகர் அ.மி.த.க பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் மேற்கல்வியை காரைநகர் இந்துவிலும் அளவெட்டி நாகபூஷணி வித்தியாலயத்திலும் கற்று சிரேஷ்ட கல்வித் தராதரப் பரீட்சையில் சித்தியெய்தினார். பரமேஸ்வர பண்டித ஆசிரியர் கலாசாலையில் கல்வி கற்று பயிற்றப்பட்ட ஆசிரியர் பரீட்சை, பண்டிதர் பரீட்சைகளில் சித்தியடைந்தார். இவர் வடமொழியிலும் புலமை பெற்று விளங்கினார். சுன்னாகம் பாடசாலையில் சைவம், சைவ சித்தாந்தம், சைவ சித்தாந்த சாஸ்திரம், தமிழ் இலக்கியம், இலக்கணம் முதலானவற்றைக் கற்று நல்லறிஞரானார். புன்னாலைக்கட்டுவன் மஹா வித்துவான் பிரம்மஸ்ரீ சி.கணேச ஐயர் அவர்களிடம் தமிழ் இலக்கணம் தொல்காப்பியம், நிகண்டு ஆகிய நூல்களைக் கற்று இலக்கண வித்தகர் ஆனார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், வித்தகர் கந்தையா பிள்ளை ஆகியோரின் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்

சைவப் பாரம்பரியமும் தமிழ் புலமையும் மிக்க இவர் காரைநகர் தமிழ் வளர்ச்சிக் கழகம், காரைநகர் மணிவாசகசபை என்பவற்றில் ஈடுபாட்டோடு பணியாற்றியவர். காரைநகரில் சைவசமய வளர்ச்சி, ஈழத்துச் சிதம்பர புராணம், தொடர்மொழிக்கு ஒருமொழி எதிர்ச்சொற்கோவை, உரைநடை ஆக்கம், பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குண இயல்பு என்பன இவர் எழுதிய நூல்களாகும்.

இவர் 'அணுக்கத் தொண்டர்' என்றும் 'பொன்மனச் செம்மல்' என்றும் 'புகழ்பெற்ற பேராசான்' என்றும் 'புகழ்க்குன்று' என்றும் பாராட்டுப் பெற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகம் இவரது சேவையை பாராட்டி 'இலக்கிய கலாநிதி' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. காரைநகர், ஈழத்துச் சிதம்பரம் பரம்பரைக்குரு க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்கள் தமது 99ஆவது வயதை நிறைவு செய்து 100 ஆவது வயதில் வாழ்ந்து வரும்போது இறைவனடி சேர்ந்தார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4413 பக்கங்கள் 62-71
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 51-52