ஆளுமை:பொன்னுத்துரை, ஏ. ரி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னுத்துரை
பிறப்பு 1928.05.15
இறப்பு 2003.08.09
ஊர் குரும்பசிட்டி
வகை கலைஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பொன்னுத்துரை, ஏ. ரி. (1928.05.15 - 2003.08.09) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர்; எழுத்தாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியை குரும்பசிட்டி மகாதேவா மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரியிலும் கற்றார். பின்னர் இந்தியா சென்று சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று 1955 இல் இலங்கை திரும்பிய இவர் காங்கேசன்துறை நடேஸ்வராகக் கல்லூரியிலும் கல்கின்னை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் இரஜவலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் கண்டி இந்து மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்திலேயே 1950ஆம் ஆண்டில் 'உலோபியின் காதல்' என்ற பள்ளி நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்ற இவர் 1951இல் குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் நிதிக்காக 'விதியின் சதி' என்ற நாடகத்தை முதற் தடவையாக தயாரித்து மேடையேற்றினார். பின்னர் நிறை குடம், இரு மனம், பதியூர் ராணி, பகையும் பாசமும், பண்பின் சிகரம், நிறைகுடம், இரணியன், ஆயிரத்தில் ஒருவர், யூலியஸ் சீசர், சங்கிலியன், ஒளி பிறந்தது, மன்னிப்பு, தாளக்காவடி ஆகிய மேடை நாடகங்களை இவர் நெறிப்படுத்தியுள்ளார். மேலும் இறுதிப்பரிசு,நாடகம், கூப்பிய கரங்கள், பக்தி வெள்ளம், மயில் ஆகிய நாடக நூல்களையும் அரங்கு கண்ட துணைவேந்தர், நிஜங்களின் தரிசனம், அரங்கக் கலைஞர் ஐவர், கலையுலகில் கால் நூற்றாண்டு ஆகிய வரலாற்று நூல்களையும் பாடசாலை நாடகம், தாளக் காவடி ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் இவர் எழுதியுள்ளார்.

பொன்னுத்துரையின் அரங்கியல் செயல்பாடுகளைக் கௌரவிக்கும் முகமாக குரும்பசிட்டி சன்மார்க்க சபை ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலையரசு க. சொர்ணலிங்கம் இவருக்கு கலைப்பேரரசு என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 149-154