ஆளுமை:சண்முகலிங்கம், மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகலிங்கம்
தந்தை மயில்வாகனம்
பிறப்பு 1931.11.15
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகலிங்கம், மயில்வாகனம் (1931.11.15 - ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நாடகவியல் துறையில் பட்டம்பெற்று 1957-1987 வரை பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

1958ஆம் ஆண்டு இளம் இந்து வாலிபர் சங்கத்துடன் இணைந்து நாடகங்களில் நடித்து வந்த இவர் 1978ஆம் ஆண்டு நாடக அரங்கக் கல்லூரியை நிறுவினார். முப்பத்தைந்துக்கும் மேற்ப்பட்ட சிறுவர் நாடகங்களையும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான நாடகங்களையும் பல்கலைக்கழக மாணவர்கள் பயனுறும் வகையிலான நாடகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். இவரால் ஆற்றுகைப்படுத்தப்பட்ட நாடகங்களில் கூடி விளையாடு பாப்பா, மண் சுமந்த மேனியர், அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும், பஞ்சவர்ண நரியார், கண்மணிக்குட்டியார், கண்டறியாத கதை, வேள்வித் தீ, புழுவாய் மரமாகி போன்றன அவற்றுள் சில.

கிழக்குப் பல்கலைக்கழகம் 40 வருட நாடக சேவையினை கௌரவிக்கும் முகமாக இவருக்கு இலக்கிய கலாநிதிப்பட்டத்தை வழங்கி கௌரவித்ததுள்ளது.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 188-189
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 158
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 126-129