ஆளுமை:பெரியதம்பிப்பிள்ளை, ஏகாம்பரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெரியதம்பிப்பிள்ளை
தந்தை ஏகாம்ரம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1989.01.06
இறப்பு 1978.11.02
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெரியதம்பிள்ளை, ஏகாம்பரம் (1899.01.08 - 1978.11.02) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஏகாம்பரம்; தாய் சின்னத்தங்கம். மண்டூரில் உவெசுலியன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார். தொடர்ந்து உயர்கல்வியினைக் கல்முனையிலும் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று நாவலர் காவியப் பாடசலையில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். 1926இலிருந்து திருகோணமலை இந்துக் கல்லூரி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

யாழ்நூல் தந்தோன், விபுலானந்த மீட்சிப்பத்து, ஈழமணித் திருநாடு, கொக்கட்டிச் சோலை தான்தோன்றிஸ்வரர் பதிகம், திருமாமாங்கப் பிள்ளையார் பதிகம், ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் பதிகம், சித்தாண்டிக் கந்தசுவாமி பதிகம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி பதிகம், காளியாமடு விநாயகர் ஊஞ்சல், புலவர்மணிக் கவிதைகள், பகவத்கீதை (மூன்று பாகங்கள்) ஆகிய கவிதை நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவருக்கு 1950 ஆம் ஆண்டில் மட்டுநகர் தமிழ்க் கலைமன்றம் "புலவர்மணி" என்னும் விருது வழங்கிக் கௌரவித்தது. மதுரகவி, சித்தாந்த ஞானபானு போன்ற பல பட்டங்களும், கௌரவமும் வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 3504 பக்கங்கள் 1-46
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 261-281
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 20-22

வெளி இணைப்புக்கள்