ஆளுமை:காமாட்சிசுந்தரம், நாகலிங்கம்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:23, 3 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | காமாட்சிசுந்தரம் |
தந்தை | நாகலிங்கம் |
பிறப்பு | 1906 |
இறப்பு | 1944 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
காமாட்சிசுந்தரம், நாகலிங்கம் (1906 - 1944) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம். இவர் சின்னத்துரை உபாத்தியார் என அழைக்கப்பட்டார். இவரது தவில் வாசிப்பால் இந்தியத் தமிழ்நாட்டுக் கலைஞர் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாவடுதுறை ரி. என். ராஜரத்தினம்பிள்ளைக்குத் தவில் வாசிக்கும் பேற்றினைப் பெற்றார். இவர் யாழ்ப்பாணம் முருகையா என்பவருடைய நாதஸ்வர இசைக்குத் தொடர்ந்து தவில் வாசிப்பதுடன் கஞ்சிரா வாசிப்பதிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 28-30