ஆளுமை:வின்சன் பற்றிக் அடிகளார், டேவிற்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வின்சன் பற்றிக் அடிகளார், டேவிற்
தந்தை டேவிற்
பிறப்பு 1936.06.07
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வின்சன் பற்றிக் அடிகளார் (1936.06.07 - ) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை டேவிற். இவர் தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையிற் பயின்று தொடர்ந்து ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் கற்று குருமட மாணவராகத் தன்னை தயார் செய்து கொழும்பு சென்று புனித வளனார் குருமடத்திற் சேர்ந்தார். அங்கு உயர் கல்வியை பொதுத் தராதரப் பரீட்சைப் படிப்பினை மேற்கொண்டார். தொடர்ந்து கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் மெய்யியல், இறையியல் பட்டதாரி, றோமாபுரி பட்டப்படிப்பில் சித்திபெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளம்கலைமாணி (பி.ஏ.) பட்டம் பெற்றுக் கொண்டார். புங்குடுதீவு சவேரியார் ஆலயத்தில் இவர் தமது குருத்துவப் பட்டத்துக்காக யாழ்ப்பாண ஆயர் அதி வந்தனைக்குரிய வ.தியோகுப்பிள்ளை ஆண்டகையால் 1981ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 4ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் புனித சூசையப்பர் குருமாணவ பயிற்சிக் குரு மடத்தில் உதவி அதிபராகவும், விரிவுரையாளராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமையற்றியுள்ளார். 'நான்' என்ற சஞ்சிகையில் எழுத்தாளராக அறிமுகமாகி யதோடு தினகரன் பத்திரிகையில் கத்தோலிக்க செய்திகளை தற்கால நிகழ்வுகளுடன் எழுதிவந்தார். இவர் குடும்ப உறவுகள் பற்றி 'உறவுகளின் இராகங்கள்' என்ற நூலினை எழுதியுள்ளார். அமல அன்னை அன்பகம் என்னும் ஒரு சிறுவர் பராமரிப்பு இல்லத்தை ஆரம்பித்து செயற்படுத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 135-138