ஆளுமை:சந்தியாபிள்ளை, கதிர்காமு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்தியாபிள்ளை கதிர்காமு
பிறப்பு
ஊர் நயினாதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்தியாபிள்ளை கதிர்காமு யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த நாடகக் கலைஞர். 1945ஆம் ஆண்டில் கிளிநொச்சிக்கு வந்து நிரந்தரமாகக் குடியேறிய இவர் கிளிநொச்சியில் இயல், இசை, நாடகத்துறைக்கு தன்னுடைய பங்களிப்பை வழங்கினார். நந்தனார், கோவலன் சரித்திரம், சிலப்பதிகாரம், அரிச்சந்திரன், வள்ளி திருமணம் போன்ற புராண கதைகளை இவர் நாட்டுக்கூத்துகளாக மேடையேற்றினார்.

நாடக முயற்சிகள் போல வில்லிசை, கரகம் போன்ற துறைகளிலும் வல்லவராக விளங்கிய இவரது நந்தனார் என்ற நாடகத்திற்கு 1978ஆம் ஆண்டு அகில இலங்கை நாடக விழாவில் ஜனாதிபதியின் தங்கப்பதக்கமும், பிரதம மந்திரி விருதும், கலாச்சார அமைச்சின் சான்றிதழும் கிடைத்தன. மேலும் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் தமிழ் அலுவற் பிரிவு 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் வைத்து இவருக்கு விருது வழங்கியும் பொற்கிளி அளித்தும் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 126-128