ஆளுமை:கோபாலகிருஷ்ணன், தம்பியப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலகிருஷ்ணன்
தந்தை தம்பியப்பா
தாய் கனகம்மா
பிறப்பு 1950.12.13
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோபாலகிருஷ்ணன், தம்பியப்பா (1950.12.13 - ) மட்டக்களப்பு, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பியப்பா; இவரது தாய் கனகம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியைப் பொத்துவில் மெதடிஸ்த மிஸன் தமிழ்க் கலவன் பாடசாலையில் பயின்றார். பின்னர் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரம் (விஞ்ஞானம்) வரை பயின்றார். 1968 இல் சப்ரகமுவ நீர்ப்பாசனப் பயிற்சிக் கலாசாலைக்கு நீர்ப்பாசனப் பயிலுனராகச் சென்று, இருவருடகாலம் ஆங்கிலமொழி மூல வதிவிடப் பயிற்சி பெற்று 01.02.1971 இல் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தொழில்னுட்ப உத்தியோகத்தராக நியமனம் பெற்றார்.

இவரது கவிதைகள், சிறுகதைகள், உருவகங்கள் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழில் பிரசுரமாகியுள்ளன. இவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகால உறுப்பினராகவும் நூலகச் செயலாளராகவும் இலக்கியச் செயலாளராகவும் பணி புரிந்துள்ளார். இவர் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் நூலகச் செயலாளராக இருந்த காலத்திலேயே சிறுவர் பகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 74-80