ஆளுமை:குமாரசுவாமி, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசுவாமி, சின்னத்தம்பி
தந்தை சின்னத்தம்பி
தாய் சின்னம்மையார்
பிறப்பு 1879
இறப்பு 1947
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி. குமாரசுவாமி (1879 - 1947) மட்டக்களப்பு, அக்கறைப்பற்றினைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் சின்னம்மையார். இவர் தமது இளமைக்கால கல்வியை மட்டக்களப்பிலே பெற்றுக்கொண்ட பின், யாழ்ப்பாணம் சென்று த. கைலாசபிள்ளையவர்களிடத்தில் சைவ சமய இலக்கியங்களையும், சமஸ்கிருதத்தையும் சிறப்புறக் கற்றுக் கொண்டார்.

அரசடி தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இவர் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். விபுலானந்த அடிகளாருக்கு சமஸ்கிருதம் கற்பித்த ஆசிரியர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலக்கியத் துறையில் மட்டுமன்றி நாட்டு வைத்தியத் துறையிலும் மிகுந்த புலமை கொண்டிருந்த இவர் ஆயுள்வேத வைத்தியக் கருவூலம், மலேரியா என்னும் காட்டுச்சுரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 86