ஆளுமை:குஞ்சித்தம்பி பண்டிதர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:07, 5 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குஞ்சித்தம்பிப் பண்டிதர் |
பிறப்பு | |
ஊர் | தம்பிலுவில் |
வகை | கல்வியியலாளர், கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பண்டிதர் குஞ்சித்தம்பி அம்பாறை, தம்பிலுவிலைச் சேர்ந்த கல்வியியலாளர், கவிஞர். மட்டக்களப்பு தூய மிக்கேல் கல்லூரியில் ஆங்கிலத்தில் எட்டாம் வகுப்பு வரை கற்றுள்ளார். பின் மதுரைத் தமிழ்ச் சங்க மாணவனாகி மதுரைத் தமிழ்ச் சங்கக் கலாசாலையில் கற்று, இந்தியாவின் பல இடங்களிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்பு தாய்நாடு வந்து மட்டக்களப்பில் சைவமும் தமிழும் வளர்த்தார். சிலகாலம் அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றினார். 2 ஆம் உலக யுத்தகாலத்தில் திருகோணமலைக் கடற்படையில் எழுத்தாளராகப் பணியாற்றினார்.
இவர் அலாவுதீன் நாடகத்தைத் தமிழில் உருவாக்கி நடித்துள்ளார். இவரால் ஆக்கப்பட்ட பஜனாமிர்தம், வருக்கமாலை பாடல்நூல்கள் 1953 இல் வெளிவந்துள்ளன. இவர் தமது நாற்பதாவது வயதிலே இவ் உலகை நீத்தார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 45
- நூலக எண்: 2469 பக்கங்கள் 236-240
- நூலக எண்: 963 பக்கங்கள் 84-85