ஆளுமை:மங்கையற்கரசி, மனோகர்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 19 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | மங்கையற்கரசி மனோகர் |
பிறப்பு | 1954.03.12 |
ஊர் | கொக்குவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ம. மங்கையற்கரசி (1954.03.12 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவர் யழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். சிறுவயதிலிருந்தே நடனத்துறையில் நாட்டங்கொண்டு சங்கீத, நடன பாடசாலையில் தன்னை இணைத்துக் கொண்டு 15 வருடங்கள் கீதாஞ்சலி வி.கே நல்லையாவின் நேரடிக் கண்காணிப்பில் பரத நாட்டியம், குச்சுப்புடி, செம்பு நடனம் முதலியவற்றை திறம்படக் கற்று தேர்ச்சி பெற்றார். இவர் 1970ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
இவரது திறமையைப் பாராட்டி இலங்கையின் முதலாவது தேசாதிபதி வில்லியம் கோபல்லாவ அவர்கள் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்தார். முன்னால் பிரதம மந்திரி சேர். ஜோன். கொத்தலாவல அவர்களும் சான்றிதழ் வழங்கி புகழாரம் சூட்டியுள்ளார்.
பரதவாணி , சமூக திலகம் ஆகிய விருதுகளைப்பெற்றுள்ள இவரை நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை 2005ஆம் ஆண்டு நடைப்பெற்ற கலாசார விழாவில் கலைஞானச்சுடர் விருதுவழங்கிக் கௌரவித்தது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 148