ஆளுமை:வேலானந்தன், வேலாயுதம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலானந்தன், வேலாயுதம்
தந்தை வேலாயுதம்
பிறப்பு 1941
ஊர் நெடுந்தீவு
வகை நாட்டியக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதம் வேலானந்தன் (1941 - ) யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியரான எஸ்.சுப்பையாவிடம் நடனம் கற்று, பின் இந்தியா சென்று நடன வித்துவான்களிடம் பயின்று வல்லுனர் ஆனார்.

நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும், யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளிலும் நடன ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அத்தோடு கோப்பாய் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் நடன விரிவுரையாளராகவும், வடக்கு கிழக்கு மாகாணசபைக் கல்வி அமைச்சில் கவின் கலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். 1969ஆம் ஆண்டு கலைக்கோயில் என்ற நிறுவனத்தை நிறுவி தனித்துவமான கலைச்சேவையை ஆற்றி வந்தார்

இவர் தனது கலைத்திறனை ஐரோப்பிய நாடுகளிலும், கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளிலும் காண்பித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இவருக்கு இலங்கையில் 2002ஆம் ஆண்டில் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாட்டிய மாமணி, கலாரத்தினா, தாண்டவச் செல்வங்கள், கலாநிகேதன், நவரச வேழ் போன்றன இவர் பெற்ற விருதுகளாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 149