ஆளுமை:தர்மராஜா, நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தர்மராஜா, நாகலிங்கம்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு 1953.12.04
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தர்மராஜா, நாகலிங்கம் (1953.12.04 -) அகளங்கன் என்ற புனைபெயரால் அறியப்படுபவர்; வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பன்னூலாசிரியர். இவரது தந்தை நாகலிங்கம். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் நிறைவு செய்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதவிஞ்ஞானத்துறையில் இளமாணிப்பட்டத்தைப் பெற்று ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

பாடசாலையில் பயிலும் காலத்திலேயே கலை, இலக்கியத்துறையில் நாட்டங்கொண்டு வில்லுப்பாட்டு, பேச்சு, கவியரங்கு, நாடகம் என பல நிகழ்வுகளிலும் பங்குகபற்றியுள்ளார். 1970களில் எழுத்துத்துறையில் பிரவேசித்த இவர் சிரித்திரன் இதழில் 'இலக்கியச்சிமிழ்', இலக்கியத்தில் நகைச்சுவை' ஆகிய தொடர் கட்டுரையை எழுதியதோடு ஈழநாடு பத்திரிகையில் 'வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்' என்ற இலக்கிய தொடர்கட்டுரையையும் எழுதியுள்ளார். இதுபோல முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல் உட்பட பல பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இலக்கியக் கட்டுரைகளை எழுதிவருகின்றார். 1980களில் ஏராளமான வானொலி நாடகங்களை எழுதியுள்ளதோடு மெல்லிசைப்பாடல்களையும் எழுதியுள்ளார்.

சிறந்த இலக்கிய ஆய்வாளனாக விளங்கும் இவர் ஜின்னாவின் இரட்டைக்காப்பிய ஆய்வு, மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள், பாரதியாரும் பாஞ்சாலிசபதமும், வாலி ஆகிய இலக்கிய ஆய்வு நூல்களையும் சின்னச் சிட்டுக்கள், சுட்டிக் குருவிகள், நல்வழி, ஆத்திசூடி, சிரிக்க விடுங்கள் முதலான சிறுவர் இலக்கியங்களையும் ஆக்கியுள்ளார்.

கலை இலக்கிய துறையில் இவரது ஆளுமைக்கும், இவராற்றிய சேவைக்கும் 1990ஆம் வவுனியா இந்து மாமன்றம் 'காவியமாமணி', விருதினையும் 1993ஆம் ஆண்டு இந்து கலாசார அமைச்சு 'தமிழ்மணி' விருதையும். 1995ஆம் ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கம் 'தமிழறிஞர்' விருதையும் வழங்கிக் கெளரவித்துள்ளது. இவர் எழுதிய 'அன்றில் பறவைகள்' என்ற நாடக நூலிற்கு 1995ஆம் ஆண்டு தேசிய சாகித்திய மண்டல விருதையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 81-98


வெளி இணைப்புக்கள்