ஆளுமை:கோபாலகிருஷ்ணன், முத்துக்குமாரு
பெயர் | கோபாலகிருஷ்ணன், முத்துக்குமாரு |
தந்தை | முத்துக்குமாரு |
பிறப்பு | 1943.05.03 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மு.கோபலகிருஷ்ணன் (1943.05.03 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த ஓர் மெல்லிசைக் கலைஞர். இவரது தந்தை முத்துக்குமாரு. இவர் சங்கீதபூஷணம் இராஜலிங்கம், தமிழ்நாடு சிதம்பரம், கிருஷ்ணமூர்த்தி ஐயர், அரியாலையூர் சங்கீதபூஷணம் பாலசிங்கம் ஆகியோரிடம் முறையாக இசைப் பயிற்சிப் பெற்றார்.
இவர் ஈழநாட்டின் பல பாகங்களிலும் முன்னணியில் திகழ்ந்த கண்ணன் இசைக் குழுவின் படகராவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 1970ஆம் ஆண்டு கொழும்பு நவரங்ககலா மண்டபத்தில் நடத்திய மெல்லிசை நிகழ்வில் பங்குபற்றியதோடு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் 'ஈழத்து பொப் இசை', 'இலை மறைத்த இசை' ஆகிய இரு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
இசையுருவாக்கம், இசைத் தட்டுருவாக்கம், நாடகங்களிற்கான இசையமைப்பு, திரைப்பட இசையமைப்பு, இசைக் கோஷ்டி ஆகியவற்றில் ஆழமிகு ஆற்றல் கொண்டு விளங்கினார். 1947ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்ற தமிழாராய்ச்சி மகாநாடு நிகழ்ச்சியிலும் இவரது கண்ணன் கோஷ்டியின் மெல்லிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இவரின் கலைத்துறை முன்னேற்றத்தையும் கலைத்துறையில் இவர் ஆற்றிய மிகச் சிறந்த சேவையையும் பராட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இவருக்கு 2007ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கி கௌரவித்ததோடு நல்லூர் பிரதேசக் கலாசாரப் பேரவையும் 2005ஆம் ஆண்டு கலைஞானச்சுடர் விருதினை வழங்கி கௌரவித்தது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 99