ஆளுமை:சர்வேஸ்வரசர்மா, சிவானந்தக்குருக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சர்வேஸ்வரசர்மா, சிவானந்தக்குருக்கள்
தந்தை சிவானந்தக்குருக்கள்
பிறப்பு 1928.01.20
ஊர் நவின்டில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.சர்வேஸ்வரசர்மா (1928.01.20 - ) யாழ்ப்பாணம் வடமராட்சி நவின்டிலைப் பிறப்பிடமாகவும் நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை சிவானந்தக்குருக்கள். அக்கால சிரேஷ்ட தராதர வகுப்பு வரை இவர் கல்வி பயின்று இந்தியா சென்று தஞ்சாவூர் வயலின் வித்துவான் ஜி.என். கோபாலகிருஷ்ணஐயரிடம் பத்துவருட காலம் வயலின் இசையை முற்று முழுதாகப் பயின்று சிறந்த வயலின் வித்துவானாக இலங்கை திரும்பினார்.

இவர் பல்வேறுபட்ட இசையரங்குகள், ஆலய விழாக்கள், நடன கலாநிகழ்வுகளில் வயலின் இசையை வெளிப்படுத்தியுள்ளார். நல்லை ஆதீனத்தின் முதலாவது குருமகாசன்னிதானம் சுவாமி நாகதம்பிரானின் சங்கீத கதாப்பிரசங்கத்திற்கு நீண்ட காலம் வயலின் பக்க வாக்கியத்தை வழங்கிய பெருமை இக் கலைஞருக்கு உண்டு. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பதினைந்து வருடகாலம் வயலின் இசைக் கலைஞராகச் சேவையாற்றிய இவர் தனது முதல் அரங்கேற்ற நிகழ்வினை வல்வெட்டித்துறை சிவன் கோவிலில் தென்னிந்திய சமயப் பெரியார் திருமுருக கிருபானந்த வாரியாரின் சங்கீத கதாப்பிரசங்கத்திற்கு பக்கவாத்தியம் இசைத்ததன் மூலம் ஆரம்பித்தார்.

யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராக 1992 - 1993 காலப்பகுதியில் பணியாற்றிய இக் கலைஞருக்கு1983ஆம் ஆண்டு மலேசியாவில் வாக்கிய சங்கீத இரத்தினம் பட்டம் வழங்கப்பட்டதோடு 2005ஆம் ஆண்டு இலங்கை அரசின் தேசிய விருதான கலாகீர்த்தி விருதுக்கும் தெரிவு செய்யப்பட்டார். ஆனபோதும் வயோதிபம் காரணமாக கொழும்பு சென்று பெற்றுக் கொள்ள முடியவில்லை. நல்லூர் கலாசாரப் பேரவை 2005ஆம் ஆண்டு இவருக்கு கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 89