ஆளுமை:தணிகாசலம், கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தணிகாசலம், கந்தையா
தந்தை கந்தையா
பிறப்பு 1946.09.28
ஊர் அச்சுவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.தணிகாசலம் (1946.09.28 -) யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கந்தையா. இவர் யாழ் பரமேஸ்வராக் கல்லூரியில் சிரேஸ்ட தராதர வகுப்பு வரை பயின்றார். தனது பதினெட்டாவது வயதில் இலக்கிய உலகில் கால்பதித்த இவர் சிறுகதைகள், கவிதைகளை பத்திரிகைகளில் எழுதிவரலானார். 1974ம் ஆண்டிலிருந்து தேசிய கலை இலக்கியப் பேரவையின் இணைச் செயலாளராக பணியாற்றி வரும் இவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றுள்ள ”தாயகம்” என்னும் ஈழத்துச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார்.

”கணிகையன்” என்ற புனைபெயர் கொண்ட இவர் வேலிகள், அகதி, நாய்களோ, பிரம்படி முதலான சிறுகதைகளை ஈழத்து வாசகர்கள் முன் படைத்துள்ளார். ”பிரம்படி” என்னும் இவரது சிறுகதைத்தொகுதி 1988ம் ஆண்டில் சென்னை புக்ஸ் சென்ரரின் வெளியீடாக வெளிவந்தது. இவரால் எழுதப்பட்ட மற்றொரு சிறுகதைத் தொகுதியான ”கதை முடியுமா” தொகுதி 1995ம் ஆண்டு சென்னை சவுத் ஏசியன் புக்ஸ் சென்ரரின் வெளியீடாகப் பிரசுரமானது. இது தவிர இவரால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு நூல் 2002ம் ஆண்டு தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக வெளிவந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 58


வெளி இணைப்புக்கள்