ஆளுமை:இலட்சுமணராசா, நாகேந்திரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இலட்சுமணராச, நாகேந்திரம்
தந்தை நாகேந்திரம்
பிறப்பு 1942.07.12
ஊர் நெடுந்தீவு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இலட்சுமணராசா,நா. (1942.07.12 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை நாகேந்திரம். உதயன் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றிய இவர், கவிதை, கட்டுரைகளை எழுதுவதிலும், நேர்காணல் செய்வதிலும் ஆற்றல் மிக்கவராகக் காணப்படுகின்றார்.

1964 ஆம் ஆண்டு தேசியப் பத்திரிகையான வீரகேசரியின் நெடுந்தீவுச் செய்தியாளராக நியமனம் பெற்றார். இவரது பல செய்திக் கட்டுரைகள் இப்பத்திரிகையில் பிரசுரமாகியதோடு 1974 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையிலும் இவரது கவிதைகள் பிரசுரமாகின. தினகரன், வீரகேசரி, உதயன், தினக்குரல், ஈழநாடு, உட்பட ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என இருபத்திரெண்டிற்கும் மேற்பட்ட ஊடகங்கள் வாயிலாக இவரது கவிதைகள் வெளிக்கொண்டு வரப்பட்டன.

இவர் உயிர்மூச்சு, சிரிக்கும் பூக்கள் என்னும் இரு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இதில் உயிர்மூச்சு என்னும் கவிதை நூலுக்கு யாழ்.இலக்கிய வட்டம் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 26


வெளி இணைப்புக்கள்