ஆளுமை:துரைசிங்கம், தம்பிராசா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைசிங்கம்
தந்தை தம்பிராசா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1937.04.09
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைசிங்கம், தம்பிராசா (1937.04.09 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் புங்குடுதீவு மேற்கு அ.மி.த.க.பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் ஆரம்பக்கல்வியை நிறைவுசெய்து நல்லூர் ஆசிரிய கலாசாலையில் பயின்று 1959இல் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார்.

பத்திரிகை நிருபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக, கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று 03.08.1997இல் ஓய்வு பெற்றார். பின்னர் புங்குடுதீவின் அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியார்றினார்.

1954ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவு கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதை தொடர்ந்தே இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபடத் தொடங்கினார். கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கின்றார். அவற்றிலே நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டல பரிசுகள் கிடைத்துள்ளன.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 182-183
  • நூலக எண்: 14014 பக்கங்கள் 03-05