ஆளுமை:இந்துபோர்ட் இராசரத்தினம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:10, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இந்துபோர்ட் இராசரத்தினம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1884.07.04
இறப்பு 1970
ஊர் யாழ்ப்பாணம்
வகை அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்துபோர்ட் இராசரத்தினம் என அழைக்கப்படுகின்ற சு. இராசரத்தினம் (1884.07.04 - 1970) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி, வழக்கறிஞர். இவரது தந்தையின் பெயர் சுப்பிரமணியம். இவர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி கற்று இந்தியா சென்று கல்கத்தாவில் சட்டக்கல்வி பயின்று நியாயவாதியாக இலங்கை திரும்பியதோடு இலங்கை சட்டக்கலூரியிலும் பயின்று சட்டத்தரணியாக விளங்கினார்.


இவர் யாழ்ப்பாணக் குடாநாடு, முல்லைத்தீவு, பதுளை, நாவலப்பிட்டி, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, ஊர்காவற்றுறை உட்பட நெடுந்தீவு முதலான இடங்களில் 174 சைவப் பாடசாலைகள், 7 ஆங்கிலப் பாடசாலைகள், 16 பன்னவேலைப் பாடசாலைகள், அங்கீகரத்துடனான 63 பாடசாலைகள், 2 அநாதை இல்லங்கள், ஓர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பவற்றை சைவவித்தியா விருத்திச் சங்க நிர்வாகத்தின் மூலம் உருவாக்கி இயங்கச் செய்தார். அத்தோடு அக்டோபர் 1928 இல் திருநெல்வேலியில் சைவாசிரியர் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பிக்கக் இவர் காரணகர்த்தராக இருந்திருக்கிறார்.

1924 ஆம் ஆண்டு முதல் வட மாகாணம் மத்தியின் இலங்கை சட்டவாக்கப் பேரவைப் பிரதிநிதியாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்தார். அக்காலத்தில் சைவர்களுக்குத் தீமையாக நடைமுறையில் இருந்த பல சட்டங்களைத் திருத்தியமைக்கக் காரணமாயிருந்த இவர் கிறித்தவப் பள்ளிகளுக்கு அருகில் சைவப்பள்ளிகள் அமைக்கவும், சைவப் பள்ளிகளுக்கு உதவி நன்கொடை பெற்றுத்தரவும் பல வேலைகளை செய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 08


வெளி இணைப்புக்கள்