நிறுவனம்:யாழ்/ அளவெட்டி அருணோதயக் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:52, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அளவெட்டி அருணோதயக் கல்லூரி
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அளவெட்டி
முகவரி அளவெட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி 0094-212241072
மின்னஞ்சல் arunodaja@gmail.com
வலைத்தளம் www.arunodayacollege.com

அளவெட்டி அருணோதயக் கல்லூரியானது யாழ்ப்பாண மாவட்டத்தின் அளவெட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஒன்றே கால் நூற்றாண்டை அண்மித்திருக்கும் இப் பாடசாலை ஒரு கிடுகுக்கொட்டிலில் 1894 இல் திரு. நாகமுத்து அருணாசலவுடையாரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்பகால முதன்மையாசிரியர் திரு.மு.செல்லப்பாச்சட்டம்பியார் ஆவார்.

1904 இல் இப் பாடசாலை அரசினர் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகியது. திரு.த.சின்னத்தம்பி (1929) அவர்களின் காலத்தில் இப்பாடசாலை ஆண்கள் பாடசாலை என்ற நிலையிலிருந்து மாறி கலவன் பாடசாலையாகி துரித வளர்ச்சி பெற்றது. மேலும் 1969 இல் கல்லூரியின் 75 வது ஆண்டுவிழாக் கொண்டாடப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் நாட்டின் போர்ச்சூழல் காரணமாகக்கல்லூரி இடம்பெயர்ந்து மருதனார்மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியில் இயங்கியது. 1993 இல் திரு.சிவபாதம் அவர்கள் பதவியுயர்வுபெற்றுச்செல்ல திரு.அ.சிறிக்குமரன் அவர்கள் பதவியேற்றார். இவரைத் தொடர்ந்து திரு.இ.மகேந்திரராஜா அவர்கள் பதவியேற்றார். அளவையில் சிதைந்து போன கல்லூரியின் கட்டமைப்பினை மீளமைத்து கல்லூரியை மீண்டும் அளவெட்டியில் இயங்கவைத்த பெருமை இவரைச்சாரும்.

கல்வியில் புகழ்பெற்றுவிளங்கும் இப்பாடசாலை விளையாட்டிலும் தேசியரீத்யான வெற்றிகளை ஈட்டியுள்ளது. உடற்பயிற்சி ஆசிரியர் திரு.எ.தம்பித்துரை அவர்களின் பயிற்சியில் சென்ற இப் பாடசாலையின் உடற்பயிற்சிக்குழு தேசியரீதியில் தங்கப்பதக்கத்தினை அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் பெற்றுச்சாதனை படைத்தது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 49-50