ஆளுமை:நாகேசு, சி. க.

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:53, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகேசு, சி. க.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.க.நாகேசு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். கொழும்பில் பொரளையிலும், நாரஹேன்பிட்டியிலும் தொழில் நிலைய அதிபராய் இருந்த இவர் புங்குடுதீவு முதலாம் வட்டார மூத்தநயினார்புலம் வரசித்திவிநாயகர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியதோடு கோயில் நிர்வாக சபையின் பொருளாளராகவும் விளங்கி பெரும்பணி ஆற்றினார்.

இவர் புங்குடுதீவு கிராம சபையின் முதலாம் வட்டார அங்கத்தவராக இருந்து பாகுபாடு காட்டாது பணி செய்தார். அத்தோடு 1970ஆம் ஆண்டு புங்குடுதீவில் ஏற்ப்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளிலும் உதவினார்.

பெருங்காடு கிராம முன்னேற்றச் சங்கம், ஐக்கிய நாணயச் சங்கம், சைவ கலா சங்கம் முதலியவற்றில் அங்கத்தவராய் திகழ்ந்து பணியாற்றினார். தனது சொந்த செலவில் தம்பனை வீதியை அமைத்துக் கொடுத்தார். அத்துடன் தமிழ் இனத்துக்காக தந்தை செல்வாவுடன் இணைந்து இவர் சத்தியாக்கிரக போராட்டங்களிலும் பங்குகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 268
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகேசு,_சி._க.&oldid=157997" இருந்து மீள்விக்கப்பட்டது