ஆளுமை:மகேசசர்மா, சிவசிதம்பர ஐயர்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:29, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகேச சர்மா, கா. சி.
தந்தை சிவசிதம்பர ஐயர்
பிறப்பு 1892
இறப்பு 1965
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காரைநகரில் வாழ்ந்த சிவசிதம்பர ஐயரின் மகனே மகேச சர்மா. இவரிற்கு தந்தையார் இட்ட பெயர் சிவஞானசுந்தர சர்மா. வியாவிற் பாடசாலையில் கற்ற பின்னர் இந்துக்கல்லூரியில் ஆங்கிலம் கற்றார். தந்தையார் இறந்ததன் காரணமாக பெரிய தந்தையாரின் முயற்சியால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் படித்து சீனியர் பரீட்சையில் சித்தியடைந்தார்.

பின்பு அங்குள்ள வேலாயுதம்பிள்ளை பாடசாலையில் சில காலம் படிப்பித்தார். பின் சொந்த ஊர் வந்து இந்துக் கல்லூரியில் படிப்பித்து வருகையில் அரசாங்க இலிகிதர் சேவையிற் சேர்ந்து கேகாலைக் கச்சேரியில் நியமனம் பெற்றார். உணவுப் பிரச்சனையால் 22 நாட்களோடு வேலையை துறந்து மறுபடியும் இந்துக்கல்லூரியில் படிப்பித்தார்.

மூன்றுவாரக் கேகாலை கச்சேரி வேலை இவரிற்கு நொத்தாரிசு வேலையில் ஆசையூட்டியது. 1923ல் நடைபெற்ற நொத்தாரிசுப் பிரவேச பரீட்சையில் தோற்றி முதலாவதாக சித்தியடைந்தார். வானசாஸ்திரத்தையும் தானாகக் கற்று தேர்ச்சியடைந்தார். நொத்தாரிசு இறுதிப் பரீட்சையில் தேறி சங்கானையிலிருந்து தொழில் புரிந்தார். 1928 ஆவணி மாதத்தில் இவரின் முதலாம் உறுதி எழுதப்படலாயிற்று.

1936ல் வானசாத்திதிரத்துறையில் மேலும் முயன்று பிரித்தானிய வான சாத்திரத்துறை அங்கத்தவரானார். 1943ல் F.R.A.S. மகிமை அங்கத்துவம் கிடைத்தது. சாதகம் கணிப்பதில் நிபுணராகவுமிருந்தார். 1965ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

வளங்கள்

{{வளம்|3769|309-310}