ஆளுமை:சுபாஷ்சந்திரன், பொன்.

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:55, 23 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுபாஷ்சந்திரன்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுபாஷ்சந்திரன், பொன். புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் ஆரம்பத்தில் யாழ். வேலணை இந்துக் கல்லூரியில் சங்கீத ஆசிரியராகக் கடமையாற்றினார். 1979 ஆம் ஆண்டில் இலங்கை வானொலிக்குத் தனது பங்களிப்பினை வழங்கத் தொடங்கிய இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளராகத் திகழ்ந்து பல மெல்லிசைப் பாடல்களை உருவாக்கியதோடு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பிரிவில் கர்நாடக இசை பாடியவராவார்.

இவர் பாடிய பல மெல்லிசைப் பாடல்கள் புகழ் பெற்றதோடு இன்றும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி வருகின்றன. 1987 ஆம் ஆண்டு நோர்வே சென்ற இவர் நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் இடம்பெற்ற சர்வதேச நிகழ்ச்சிகளில் கர்நாடக இசையில் அமைந்த இலங்கைப் பாடல்களைப் பாடி நாட்டிற்கும் இலங்கைக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 238