ஆளுமை:பரமநாதன், செல்லத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமநாதன்
தந்தை செல்லத்தம்பி
பிறப்பு 1942.05.04
ஊர் மண்டைதீவு
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமநாதன், செல்லத்தம்பி (1942.05.04 - ) யாழ்ப்பாணம், மண்டைத்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்தம்பி. இவர் ஏ.சுப்பையாப்பிள்ளை, எஸ். நமசிவாயம், சண்முகலிங்கம், சோமசுந்தரம், பற்குணம் ஆகியோரிடம் தனது கல்வியைப் பயின்றார்.

1958ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் இலங்கையில் வெளிவரும் சகல பத்திரிகைகளிலும் கவிதை, கட்டுரை, சிறுகதை என்பனவற்றை எழுதியுள்ளார். மேலும் 1962ஆம் ஆண்டில் கலைச்செல்வி நாடக மன்றத்தை ஆரம்பித்து அதன் ஊடாக வீரமைந்தர், விந்திய வீரன், இன்பக்கனவு, இரத்தப்பசி உட்பட 25 நாடகங்கள் வரை நடித்துள்ளார்.

இவர் கலைச்சுடர், கலைச்செல்வன், கலைமணி, புலவர், பண்டிதர், மகாவித்துவான், தமிழ் அறிஞர், கவிஞர், முத்தமிழ்க் கவிஞர், தமிழ்ச் செம்மல், சைவச் செம்மல், சிவத்தமிழ்ச் செல்வர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 31
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 38-39