ஆளுமை:வீரசிங்கம், நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வீரசிங்கம், நாகலிங்கம்
தந்தை நாகலிங்கம்
தாய் சின்னம்மா
பிறப்பு 1928.05.15
ஊர் வேலணை
வகை சமூக சேவையாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம் வீரசிங்கம்(பி-1928.05.15) அவர்கள் வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சமூக சேவகர். துரைச்சாமி என்பது இவரது இயற்பெயர். ஆனபோதும் இவர் கல்வியில் காட்டிய திறமை காரணமாக ஆசிரியர் அப்பாத்துரை இவருக்கு வீரசிங்கம் எனும் பட்டபெயரைச் சூட்டினார். காலப்போக்கில் துரைச்சாமி என்ற பெயர் விலகி வீரசிங்கம் என்ற பெயரே நிலைத்து நின்றது.

தான் பிறந்த சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். வேலணை கிராம முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக இருந்து மக்களின் நலனுக்காக பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு இடம்பெற்ற கிராமச் சபைத் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இப் பதவிநிலையூடாக போக்குவரத்து வீதிகளை திருத்தியமைத்ததோடு வங்களாவடியில் பஸ் தரிப்பிடம் ஒன்றையும் அமைத்துக்கொடுத்தார். நீர்ப்பாசன தேவையை நிவர்த்தி செய்வதற்கென குளங்ளை புணரமைத்து வாய்க்கால்களையும் அமைத்துக்கொடுத்தார்.

1986ஆம் ஆண்டில் பண்ணை வீதியில் இராணுவமுகாம் அமைக்கப்பட்டவேளை தீவுப் பகுதி மக்களின் போக்குவரத்து தடைப்பட்டது. அவ்வேளை அராலியூடாக போக்குவரத்து செய்வதற்கான வீதியமைப்பில் முன்னின்று பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 528-531