ஆளுமை:நாகநாதபண்டிதர், அம்பலவாணப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகநாதபண்டிதர், அம்பலவாணப்பிள்ளை
தந்தை அம்பலவாணப்பிள்ளை
பிறப்பு 1814
இறப்பு 1884
ஊர் சுன்னாகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. நாகநாதபண்டிதர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அம்பலவாணப்பிள்ளை. தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய நன்கு மொழிகளிலும் பெரும் புலமை வாய்ந்தவராக விளங்கிய இவர் முல்லைத்தீவிலும், கற்பிட்டியிலும் நீதிமன்றப் பேச்சு மொழிப்பெயர்ப்பாளராக கடமையாற்றினார்.


இவரால் மொழிப்பெயர்க்கப்பட்ட இதோபதேசம் என்னும் நூல் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவர் பாடிய தனிக்கவிகள் சில உதயதாரகை பத்திரிகையிலும், கட்டுரைகள் பல இலங்காபிமானியிலும் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 58-59
  • நூலக எண்: 963 பக்கங்கள் 166