ஓவியம் வரையாத தூரிகை
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:51, 7 பெப்ரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
ஓவியம் வரையாத தூரிகை | |
---|---|
நூலக எண் | 140 |
ஆசிரியர் | அனார் |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மூன்றாவது மனிதன் |
வெளியீட்டாண்டு | 2004 |
பக்கங்கள் | 58 |
வாசிக்க
- ஓவியம் வரையாத தூரிகை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
பெண்களின் ஆத்மார்த்தமான குரலினைப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி விளிம்புநிலை வாழ்வை பலவழிகளில் பதிவு செய்வதில் வெற்றி கண்டுள்ளது இந்நூல். பெண்கள் என்ற காரணத்துக்காக மறுக்கப்படுகின்ற நியாயம் பற்றி துணிச்சலான கோரிக்கை விடும் இக்கவிதைகள், உணர்ச்சி மிக்கதும், மனித சுதந்திரத்துக்கு முக்கியமளிப்பதுமாக உள்ளன. இக் கவிதைத் தொகுப்பு 2004ம் ஆண்டிற்கான இலங்கை சாஹித்திய மண்டலப்பரிசு பெற்றது. நூலாசிரியை கிழக்கிலங்கையின் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
பதிப்பு விபரம்
ஓவியம் வரையாத தூரிகை. அனார். (இயற்பெயர்: இஸத் ரெஹானா அஸீம்). கொழும்பு 3: மூன்றாவது மனிதன் வெளியீடு, 143, முகாந்திரம் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 42 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20x14 சமீ.