நிறைவைத் தேடி
நிறைவைத் தேடி | |
---|---|
நூலக எண் | 543 |
ஆசிரியர் | இளங்கீரன் |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தமிழ் மன்றம் |
வெளியீட்டாண்டு | 1993 |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- நிறைவைத் தேடி (2.58 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
1970-80களில் இளங்கீரன் எழுதி இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட பத்துச் சிறுகதைகளை இது உள்ளடக்கியுள்ளது. சமூகத்தின் பல்வேறு படித்தரங்களிலும் இருந்து, சவால்களோடு போராடி வாழும் மக்களை தன் கதைக்குக் கதாபாத்திரங்களாக அவர் கொண்டுள்ளார். தான் படைத்த கதைகளினூடாக முதலாளி வர்க்கத்தின் கோரத்தையும் அவர்களின் அரக்கத்தனத்தையும் சாடுகின்றார். இவர்களின் வஞ்சகப் போக்கினால், ஏழைகள்- அதுவும், குறிப்பாகப் பெண்கள், அனுபவிக்கின்ற ஏக்கப் பெருமூச்சுக் கலந்த துன்ப துயரங்களை சமூகத்துக்குக் காட்ட விளைகின்றார். சமூகநல நாட்டத்தையும், புதியதோர் உலகத்தைக் காண முயலும் வேட்கையினையும் மானிட நேயத்தையும் அவரது கதைகளில் தரிசிக்க முடிகின்றது.
பதிப்பு விபரம்
நிறைவைத் தேடி. சுபைர் இளங்கீரன். கண்டி: தமிழ் மன்றம், கல்ஹின்னை, 1வது பதிப்பு, 1993. (சென்னை 600001: Bushra Agencies)
72 பக்கம், விலை: ரூபா 30. அளவு: 17.5 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 1650)