"நிறுவனம்:அம்/ தம்பட்டை சித்திவிநாயகர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{நிறுவனம்| பெயர்=அம்/ தம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} | }} | ||
− | தம்பட்டை ஶ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை எனும் இடத்தில் அமைந்துள்ளது. | + | தம்பட்டை ஶ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இற்றைக்கு சுமார் 19ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனுநேயகஜபாகு என்ற அரசன் திருக்கோவில் ஆலயத்திற்குத் திருப்பணி செய்த வேளையில் தம்பட்டையில் வீர சைவ அந்தணர்கள் குடியமர்த்தப்பட்டதுடன் அவர்களுக்கு பட்டயம் ஒன்று வழங்கப்பட்டது. அத்துடன் மாணிக்க வைரத்தினாலான கணேச விக்கிரகம் ஒன்றும் தம்பட்டை மக்களின் வழிபாட்டிற்காக வழங்கப்பட்டதென்பது வரலாற்று உண்மையாகும். |
+ | |||
+ | இந்த கணேச விக்கிரகமே பல நூற்றாண்டு காலமாக தம்பட்டை மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. பின்னர் ஶ்ரீ ஆறுமுக சுவாமிக்கும் தம்பட்டையில் ஆலயம் ஒன்று உருவானது. ஆயினும் ஆதிகாலத்தில் தம்பட்டை மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட கணேச விக்கிரகமானது இற்றைக்கு 62 வருடங்களுக்கு முன்னர் களவாடப்பட்டது. | ||
+ | |||
+ | அரசினால் தம்பட்டை மக்களுக்காக வழங்கப்பட்டதும் தமது மூதாதையர்களான வீரசங்கமக் குருமாரால் பூசிக்கப்பட்டதும் மிகவும் பழமையானதும் மிகுந்த பெறுமதியுடையதுமான இந்த கணேச விக்கிரகம் களவாடப்பட்டதானது தம்பட்டை கிராம மக்கள் மத்தியில் மிகுந்த மனக்கவலைகளை ஏற்படுத்தியது. ஆலயத்தில் விநாயகர் வழிபாடு செய்ய முடியாத நிலையில் மக்கள் தவித்தனர். அவ்வேளையில் தம்பட்டையின் கடற்கரையிலே யானைக்கால் என்ற சிறிய மலை ஒன்று அமைந்துள்ள இடத்திலே விநாயகரின் உருவத்தை ஒத்த யானை முகத்துடனான கருங்கல் ஒன்று கரையொதிங்கிக் கிடப்பதனைக் கிராம மக்கள் கண்டனர். | ||
+ | |||
+ | மிகுந்த ஆச்சரியமடைந்த மக்கள் விநாயகப் பெருமானின் அருளினை நினைத்து பரவசமடைந்தனர். அவ்வேளையில் தம்பட்டையில் வாழ்ந்த பெரியவர்களாகிய திரு.க.வேலாயுதம், சிவஶ்ரீ. சிவகுருக்கள், திரு.க.சிவலிங்கம், திரு.க.வடிவேல், திரு.கு.கந்தையா போன்ற பெரியவர்கள் விநாயகப் பெருமானைக் கடற்கரையில் இருந்து எடுத்து வந்து திரு.கு.கந்தையா என்பவரின் நிலத்தில் தற்காலிகமாக ஒரு பந்தல் அமைத்து விநாயகப் பெருமானை வழிபட்டுவந்தனர். | ||
+ | |||
+ | சிவஶ்ரீ.த.சிவகுருக்களால் தொடர்ச்சியாக தினமும் பூசைகள் நடாத்தப்பட்டு வந்தன. இவ்வேளையில் கிராமத்தில் பல நன்மைகளும் சித்திகளும் வந்து சேர்ந்தமையினால் இவ் விநாயகருக்கு ஶ்ரீ சித்தி விநாயகப் பெருமான் என நாமம் சூட்டினர். அவ்வேளையில் திரு.கு. கந்தையா என்பவரின் வாழ்வில் பல இடர்பாடுகள் வந்து கொண்டிருந்தது. தாம் குடியிருக்கும் நிலத்தில் கோவில் அமைந்திருப்பது தான் இதற்கான காரணம் என உணர்ந்த இவர் மேற்கூறிய பெரியவர்களிடம் தமது நிலைமையை எடுத்துரைத்தார். | ||
+ | |||
+ | உண்மையினை உணர்ந்த பெரியவர்களும் விநாயகப் பெருமானை அங்கிருந்து எடுத்து கடற்கரைப் பக்கமாக தனியாக ஒரு இடத்தில் பந்தல் ஒன்றினை அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர். அக் காலப்பகுதியில் இவ்வாலயம் மரம், கிடுகு கொண்டு அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களிலும் தாக்குப்பிடிக்க முடியாத நிலை காணப்பட்டது. | ||
+ | |||
+ | இதனைக் கண்ட திரு.க. தாமோதரம், திரு.அ. கனகசூரியம், திரு.ஆ. கந்தையா, திரு. வேலுப்பிள்ளை, திரு. காளிக்குட்டி, திரு. குழந்தையர், திரு. இராசையா, திரு. வேலாயுதம் போன்றவர்களின் முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் சிறிய அளவிலான ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு தொடர்ந்து பூசைகள் இடம்பெற்றன. | ||
+ | |||
+ | அத்துடன் ஆகம முறைப்படி ஓர் ஆலயம் அமைந்தால் ஆலயத்தின் வெளி வீதிக்கு தற்போது இருக்கின்ற இடம் போதாமல் இருக்கும் என்பதனை உணர்ந்த சில பெரியவர்கள் தமது சிறிய அளவிலான காணித் துண்டுகளை ஆலயத்தின் வெளிவீதி அமைக்க அன்பளிப்பாக கொடுத்தனர். இது சிறிய அளவிலான ஆலயமாக இருந்தமையினால் ஆகம முறைப்படி பெரிய அளவிலான ஆலயம் ஒன்றை அமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பெரியவர்களும் ஊர்மக்களும் எண்ணம் கொண்டு முயற்சி செய்தனர். | ||
+ | இதன் விளைவாக சிவஶ்ரீ.க. லோகநாதக் குருக்கள் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் திரு.வி. மோகன், திரு. செல்லத்துரை, திரு.வீ. பாக்கியராசா ஆகியோர்களால் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தொடர்ந்து வந்த பல நிர்வாகங்களின் கடுமையான உழைப்பினாலும் முயற்சியினாலும் கட்டுமாணப் பணிகள் இடம்பெற்று மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. |
23:52, 9 டிசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அம்/ தம்பட்டை சித்திவிநாயகர் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | அம்பாறை |
ஊர் | தம்பட்டை |
முகவரி | தம்பட்டை, அம்பாறை |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
தம்பட்டை ஶ்ரீ சித்திவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இற்றைக்கு சுமார் 19ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனுநேயகஜபாகு என்ற அரசன் திருக்கோவில் ஆலயத்திற்குத் திருப்பணி செய்த வேளையில் தம்பட்டையில் வீர சைவ அந்தணர்கள் குடியமர்த்தப்பட்டதுடன் அவர்களுக்கு பட்டயம் ஒன்று வழங்கப்பட்டது. அத்துடன் மாணிக்க வைரத்தினாலான கணேச விக்கிரகம் ஒன்றும் தம்பட்டை மக்களின் வழிபாட்டிற்காக வழங்கப்பட்டதென்பது வரலாற்று உண்மையாகும்.
இந்த கணேச விக்கிரகமே பல நூற்றாண்டு காலமாக தம்பட்டை மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. பின்னர் ஶ்ரீ ஆறுமுக சுவாமிக்கும் தம்பட்டையில் ஆலயம் ஒன்று உருவானது. ஆயினும் ஆதிகாலத்தில் தம்பட்டை மக்களுக்காக அரசினால் வழங்கப்பட்ட கணேச விக்கிரகமானது இற்றைக்கு 62 வருடங்களுக்கு முன்னர் களவாடப்பட்டது.
அரசினால் தம்பட்டை மக்களுக்காக வழங்கப்பட்டதும் தமது மூதாதையர்களான வீரசங்கமக் குருமாரால் பூசிக்கப்பட்டதும் மிகவும் பழமையானதும் மிகுந்த பெறுமதியுடையதுமான இந்த கணேச விக்கிரகம் களவாடப்பட்டதானது தம்பட்டை கிராம மக்கள் மத்தியில் மிகுந்த மனக்கவலைகளை ஏற்படுத்தியது. ஆலயத்தில் விநாயகர் வழிபாடு செய்ய முடியாத நிலையில் மக்கள் தவித்தனர். அவ்வேளையில் தம்பட்டையின் கடற்கரையிலே யானைக்கால் என்ற சிறிய மலை ஒன்று அமைந்துள்ள இடத்திலே விநாயகரின் உருவத்தை ஒத்த யானை முகத்துடனான கருங்கல் ஒன்று கரையொதிங்கிக் கிடப்பதனைக் கிராம மக்கள் கண்டனர்.
மிகுந்த ஆச்சரியமடைந்த மக்கள் விநாயகப் பெருமானின் அருளினை நினைத்து பரவசமடைந்தனர். அவ்வேளையில் தம்பட்டையில் வாழ்ந்த பெரியவர்களாகிய திரு.க.வேலாயுதம், சிவஶ்ரீ. சிவகுருக்கள், திரு.க.சிவலிங்கம், திரு.க.வடிவேல், திரு.கு.கந்தையா போன்ற பெரியவர்கள் விநாயகப் பெருமானைக் கடற்கரையில் இருந்து எடுத்து வந்து திரு.கு.கந்தையா என்பவரின் நிலத்தில் தற்காலிகமாக ஒரு பந்தல் அமைத்து விநாயகப் பெருமானை வழிபட்டுவந்தனர்.
சிவஶ்ரீ.த.சிவகுருக்களால் தொடர்ச்சியாக தினமும் பூசைகள் நடாத்தப்பட்டு வந்தன. இவ்வேளையில் கிராமத்தில் பல நன்மைகளும் சித்திகளும் வந்து சேர்ந்தமையினால் இவ் விநாயகருக்கு ஶ்ரீ சித்தி விநாயகப் பெருமான் என நாமம் சூட்டினர். அவ்வேளையில் திரு.கு. கந்தையா என்பவரின் வாழ்வில் பல இடர்பாடுகள் வந்து கொண்டிருந்தது. தாம் குடியிருக்கும் நிலத்தில் கோவில் அமைந்திருப்பது தான் இதற்கான காரணம் என உணர்ந்த இவர் மேற்கூறிய பெரியவர்களிடம் தமது நிலைமையை எடுத்துரைத்தார்.
உண்மையினை உணர்ந்த பெரியவர்களும் விநாயகப் பெருமானை அங்கிருந்து எடுத்து கடற்கரைப் பக்கமாக தனியாக ஒரு இடத்தில் பந்தல் ஒன்றினை அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர். அக் காலப்பகுதியில் இவ்வாலயம் மரம், கிடுகு கொண்டு அமைக்கப்பட்டதால் மழைக்காலங்களிலும் தாக்குப்பிடிக்க முடியாத நிலை காணப்பட்டது.
இதனைக் கண்ட திரு.க. தாமோதரம், திரு.அ. கனகசூரியம், திரு.ஆ. கந்தையா, திரு. வேலுப்பிள்ளை, திரு. காளிக்குட்டி, திரு. குழந்தையர், திரு. இராசையா, திரு. வேலாயுதம் போன்றவர்களின் முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் சிறிய அளவிலான ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு தொடர்ந்து பூசைகள் இடம்பெற்றன.
அத்துடன் ஆகம முறைப்படி ஓர் ஆலயம் அமைந்தால் ஆலயத்தின் வெளி வீதிக்கு தற்போது இருக்கின்ற இடம் போதாமல் இருக்கும் என்பதனை உணர்ந்த சில பெரியவர்கள் தமது சிறிய அளவிலான காணித் துண்டுகளை ஆலயத்தின் வெளிவீதி அமைக்க அன்பளிப்பாக கொடுத்தனர். இது சிறிய அளவிலான ஆலயமாக இருந்தமையினால் ஆகம முறைப்படி பெரிய அளவிலான ஆலயம் ஒன்றை அமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பெரியவர்களும் ஊர்மக்களும் எண்ணம் கொண்டு முயற்சி செய்தனர். இதன் விளைவாக சிவஶ்ரீ.க. லோகநாதக் குருக்கள் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் திரு.வி. மோகன், திரு. செல்லத்துரை, திரு.வீ. பாக்கியராசா ஆகியோர்களால் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு தொடர்ந்து வந்த பல நிர்வாகங்களின் கடுமையான உழைப்பினாலும் முயற்சியினாலும் கட்டுமாணப் பணிகள் இடம்பெற்று மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.