"ஆளுமை:துரைசிங்கம், இராசையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{ஆளுமை| பெயர்=இராசையா துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
{ஆளுமை|
+
{{ஆளுமை|
 
பெயர்=இராசையா துரைசிங்கம்|
 
பெயர்=இராசையா துரைசிங்கம்|
 
தந்தை=இராசையா|
 
தந்தை=இராசையா|

22:43, 10 மே 2023 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசையா துரைசிங்கம்
தந்தை இராசையா
தாய் ராசம்மா
பிறப்பு 1957.05.06
ஊர் திருக்கோணமலை
வகை சமூக வழிகாட்டி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


யாழ்ப்பாணத்தில் உள்ள கொடிகாமம் வரணி பகுதியில் இராசையா மற்றும் ராசம்மா ஆகியோருக்கு மகனாக 1957.05.06 திகதி பிறந்தார். இவர் தனது பாடசாலை கல்வியை வரணி மகா வித்தியாலயத்தில் கற்று, 1969 ஆம் ஆண்டு நில அளவையாளர் திணைக்களத்தில் பணியாளராக இணைந்து கொண்டார். 1994 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து பணி நிமித்தம் திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்ததுடன், திருக்கோணமலை சமாது ஒழுங்கையில் தனது வாழ்க்கையை தொடர்ந்து வந்தார்.

இவர் திருக்கோணமலையின் சிவன் ஆலயத்தை சுற்றி காணப்படும் பகுதிகளில் மரணங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில், அங்கிருக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாகவும், தமிழர்களால் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் சடங்கு நடைமுறைகளை முன்னின்று வழிகாட்டுபவராகவும் காணப்படுகின்றார். பொதுவாக தற்காலத்தில் மருவி அழிந்து வரும் தமிழர் சடங்குகளை சரியான முறையில் வழிகாட்டி நடத்துவதில் திறமையானவர்.

மரணம் இடம்பெற்ற உடன் செய்ய வேண்டிய முறைகள், காடாத்து, அந்தியோட்டி, துடக்கு கழித்தல் போன்ற நடைமுறைகளை மிகவும் சரியான முறையில் செய்வதில் திறமையானவர். குறித்த பகுதி திருக்கோணமலை நகரத்திற்கு அண்மையில் காணப்படுவதனால் பொதுவாக கலாச்சார நடைமுறைகளில் மறுவல் ஏற்பட்டு வந்தாலும், அவற்றை சரியாக கூறி நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இன்றைய சமூதாயத்துக்கு காணப்படும் சந்தர்ப்பத்தில் இவர் ஒரு ஆளுமை மிக்க நபர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.