"ஆளுமை:செல்வராணி சோமசேகரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=செல்வராணி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (Meuriy, ஆளுமைːசெல்வராணி சோமசேகரம்பிள்ளை பக்கத்தை ஆளுமை:செல்வராணி சோமசேகரம்பிள்ளை என்ற தலைப்...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:31, 8 சூன் 2022 இல் கடைசித் திருத்தம்
பெயர் | செல்வராணி |
தந்தை | பொன்னம்பலம் |
தாய் | பொன்னம்மா |
பிறப்பு | 1943.06.15 |
ஊர் | வலந்தலை, காரைநகர் |
வகை | ஆசிரிய ஆலோசகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வராணி.சோமசேகரம்பிள்ளை (1943.06.15 - ) வலந்தலை, காரைநகரைச் சேர்ந்த எனும் ஆசிரிய ஆலோசகர். இவரது தந்தை பொன்னம்பலம் , தாய் பொன்னம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை சுப்பிரமணிய வித்தியாசாலையிலும், உயர்கல்வியை கிளிநொச்சி இந்துக்கல்லூரியிலும் பயின்றார். 1952 ல் கிளிநொச்சி உருத்திரபுரம் எனும் ஊரில் குடியேறினார்.பின்னர் திருநகர் எனும் ஊரினை வசிப்பிடமாகவும் கொண்டவர். 1972ம் ஆண்டு தொடக்கம் 1973 வரை களுத்துறை அளுத்கம முஸ்லீம் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார். 1974ல் பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் பயின்றார். 1976 தொடக்கம் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் ஆசிரியராகவும், 1993ல் ல் ஆசிரிய ஆலோசகராக கடமை புரிந்தார். இவர் பஜனை பாடுவதிலும் சமயசொற்பொழிவாற்றுவதிலும் புகழ் பெற்று விளங்கினார். திருநகர் தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்க தலைவியாகவும்,ஞானவைரவர் அறநெறிப்பாடசாலையின் அதிபராகவும், கிளி.மாவட்ட மாதர் ஒன்றியத்தலைவியாகவும் கிளி.மாவட்ட சைவ மங்கையர் கழக செயலாளராகவும், சமாதான நீதிவானாகவும், கரைச்சிப்பிரதேச மத்தியஸ்த சபையின் உறுப்பினராகவும், கிளி. உருத்திரபுரம் காந்தி இல்லமும், சிறுவர் பயிற்சி நிலையத்தினதும் செயலாளரும், கிளி மாவட்ட திருநெறிக்கழகத்தில் பிரதான பதவிகளிலும் இருந்து சமூக மற்றும் சமயத்தொண்ட்டாற்றி வருகின்றார்., இவர் பெற்ற விருதுகளாக திருநெறிக்கழகத்தின் சைவமாமணி விருது, கனடா சைவத்திருச்சபையின் திருமுறைச்சுடர் விருது, கரைச்சிப்பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட கரை எழில் விருது, இலங்கையின் அதியுயர் விருதானகலாபூஷணம் விருது ஆகியவிருதுகளைக் குறிப்பிடலாம்.