"ஆளுமை:நித்தியானந்தன், பொன்னம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்= நித்தியானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:58, 9 மே 2022 இல் நிலவும் திருத்தம்

பெயர் நித்தியானந்தன்
தந்தை பொன்னம்பலம்
தாய் அமுதவல்லி
பிறப்பு 1948.10.04
இறப்பு -
ஊர் பொன்னாவெளி
வகை அரசசேவை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Nithiyananthan.jpg

நித்தியானந்தன் பொன்னம்பலம் (1948.10.04 -) பொன்னாவெளி பூநகரியைச் சேர்ந்த அரச அதிகாரி. இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் அமுதவல்லி. இவர் தனது ஆரம்பக்கல்வியை பொன்னாவெளி சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், உயர்கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் பயின்றார். யாழ். பல்கலைக்கழகத்தில் பொதுக்கலைமாணி பட்டம் பெற்றார். வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

1972ல் வட்டக்கச்சியில் கிராம சேவையாளராக 5 வருடங்கள் கடமை புரிந்தார். மன்னார் கல்வித்திணைக்களத்தில் 3 வருடங்கள் எழுதுவினைஞராகக் கடமை புரிந்தார். சமூக சேவை உத்தியோகத்தராக 10 வருடங்கள் கிளிநொச்சியில் கடமை புரிந்தார். பின் கிளிநொச்சியில் திட்டப்பணிப்பாளராக 3 வருடங்களும் உதவி அரசாங்க அதிபராக கரைச்சியில் 5 வருடங்களும் 10 வருடங்களாக விசேட ஆணையாளராகவும் கடமை புரிந்தார்.. இவர் சிறந்த சமூக சேவையாளராக விளங்கினார். அந்த வகையில் KDRRO நிறுவனத்தின் பொருளாளராகவும் கடமை புரிந்தார். மற்றும் மகாதேவ ஆச்சிரமத்தின் சிறுவர் இல்லத்தின் தோற்றத்திலும் வன்னேரி முதியோர் இல்லத்தின் உருவாக்கத்திலும், கிளி. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார். இவர் பெற்ற விருதுகளாக கரைஎழில் கரைச்சிப்பிரதேச சபையினாலும், சாமசிறீ தேசமான்ய சமூகஜோதி விருது, மற்றும் கலாபூஷணம் ஆகியவிருதுகளைக் குறிப்பிடலாம்.

இவற்றையும் பார்க்கவும்