"ஆளுமை:மகாலக்ஸ்மி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை|பெயர்=மகாலக்ஸ்மி|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 9: | வரிசை 9: | ||
}} | }} | ||
− | [[படிமம்:.jpg|300px]] | + | [[படிமம்:Mahaluxmi.jpg|300px]] |
மகாலக்ஸ்மி (1958.08.14 - 2015.08.27) மன்னார். 1987 வரை பேசாலை பற்றிமா மகாவித்தியாலத்திலும் இடைநிலை கல்வியை மன்னார் கன்னியர் மடத்திலும் தொடர்ந்த இவர் உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தியா அகதி முகாமிற்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. உயர்தரம் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற இவர் தனது கல்வியை தொடரமுடியாத விரக்தியால் தன்னைப் போன்று ஏனைய மாணவர்களும் பாதிக்கப்படக் கூடாது எனும் கொள்கையோடும் முகாமில் கற்றல் உதவிகளை செய்வதோடு, முகாமின் சூழல் நிலைப்பாடு (வசிப்பிடம், நீர், உணவு, மலசலகூடம் போன்ற அடிப்படை தேவைகள்) பற்றி தனது கவனத்தை திருப்பி விட்டு செயற்பட தொடங்கினார். முதலுதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் போன்றவற்றை கவனித்தார். நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க தூண்டுதலாக இருந்தார். தன்னுடைய கல்வி வளர்ச்சியிலும் கவனத்தை செலுத்தினார். இவ்வாறே இவரது சமூக சேவை ஆரம்பமாகியது. 1998 ல் இலங்கை திரும்பும் சாத்தியம் எட்டியதும் மன்னார் நகரிற்கு மீண்டும் வந்த இவர் யுத்தத்தின் பின்னர் மக்களுக்காக செயற்பட வேண்டிய கட்டாய தேவை இருப்பதை உணர்ந்து கொண்டார். அதிலும் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண்பிள்ளைகள் தொடர்பாக வேலை செய்ய வேண்டிய தேவையை உணர்ந்து கொண்டார். | மகாலக்ஸ்மி (1958.08.14 - 2015.08.27) மன்னார். 1987 வரை பேசாலை பற்றிமா மகாவித்தியாலத்திலும் இடைநிலை கல்வியை மன்னார் கன்னியர் மடத்திலும் தொடர்ந்த இவர் உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தியா அகதி முகாமிற்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. உயர்தரம் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற இவர் தனது கல்வியை தொடரமுடியாத விரக்தியால் தன்னைப் போன்று ஏனைய மாணவர்களும் பாதிக்கப்படக் கூடாது எனும் கொள்கையோடும் முகாமில் கற்றல் உதவிகளை செய்வதோடு, முகாமின் சூழல் நிலைப்பாடு (வசிப்பிடம், நீர், உணவு, மலசலகூடம் போன்ற அடிப்படை தேவைகள்) பற்றி தனது கவனத்தை திருப்பி விட்டு செயற்பட தொடங்கினார். முதலுதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் போன்றவற்றை கவனித்தார். நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க தூண்டுதலாக இருந்தார். தன்னுடைய கல்வி வளர்ச்சியிலும் கவனத்தை செலுத்தினார். இவ்வாறே இவரது சமூக சேவை ஆரம்பமாகியது. 1998 ல் இலங்கை திரும்பும் சாத்தியம் எட்டியதும் மன்னார் நகரிற்கு மீண்டும் வந்த இவர் யுத்தத்தின் பின்னர் மக்களுக்காக செயற்பட வேண்டிய கட்டாய தேவை இருப்பதை உணர்ந்து கொண்டார். அதிலும் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண்பிள்ளைகள் தொடர்பாக வேலை செய்ய வேண்டிய தேவையை உணர்ந்து கொண்டார். |
22:23, 18 ஏப்ரல் 2022 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மகாலக்ஸ்மி |
பிறப்பு | 1968.08.24 |
ஊர் | மன்னார் |
வகை | பெண் ஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகாலக்ஸ்மி (1958.08.14 - 2015.08.27) மன்னார். 1987 வரை பேசாலை பற்றிமா மகாவித்தியாலத்திலும் இடைநிலை கல்வியை மன்னார் கன்னியர் மடத்திலும் தொடர்ந்த இவர் உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தியா அகதி முகாமிற்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. உயர்தரம் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற இவர் தனது கல்வியை தொடரமுடியாத விரக்தியால் தன்னைப் போன்று ஏனைய மாணவர்களும் பாதிக்கப்படக் கூடாது எனும் கொள்கையோடும் முகாமில் கற்றல் உதவிகளை செய்வதோடு, முகாமின் சூழல் நிலைப்பாடு (வசிப்பிடம், நீர், உணவு, மலசலகூடம் போன்ற அடிப்படை தேவைகள்) பற்றி தனது கவனத்தை திருப்பி விட்டு செயற்பட தொடங்கினார். முதலுதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் போன்றவற்றை கவனித்தார். நடமாடும் வைத்திய சேவைகளை வழங்க தூண்டுதலாக இருந்தார். தன்னுடைய கல்வி வளர்ச்சியிலும் கவனத்தை செலுத்தினார். இவ்வாறே இவரது சமூக சேவை ஆரம்பமாகியது. 1998 ல் இலங்கை திரும்பும் சாத்தியம் எட்டியதும் மன்னார் நகரிற்கு மீண்டும் வந்த இவர் யுத்தத்தின் பின்னர் மக்களுக்காக செயற்பட வேண்டிய கட்டாய தேவை இருப்பதை உணர்ந்து கொண்டார். அதிலும் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண்பிள்ளைகள் தொடர்பாக வேலை செய்ய வேண்டிய தேவையை உணர்ந்து கொண்டார். இதற்காக கரித்தாஸ் நிறுவணத்தின் வாழ்வுதயம் UNHCR ன் சிறு வாழ்வாதார திட்டங்கள் TPS நிறுவனத்தின் ஊழியராக பல திட்டங்களுக்காக தனது செயற்பாடுகளை வழங்கி வந்த வேளை மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் தன்னகத்தே இவரை இணைத்துக் கொண்டது. மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் திட்ட அலுவலராக இணைந்து மாவட்ட இணைப்பாளராக பணியாற்றி தற்பொழுது இவ் ஒன்றியத்தின் இயக்குனராக தொழிற்படும் இவர் ஓர் பெண்ணிய தன்னார்வ செயற்பாட்டாளர் ஆவர். இவர் மன்னார் மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களிலும் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள தவறவில்லை. தனது செயற்பாடுகளுக்கான ஓர் ஊடகமாகவே பணிபுரியும் அலுவலகங்களை பயன்படுத்தினாரேயன்றி அலுவலகங்களில் இவர் தங்கியிருக்கவில்லை.
இவரது செயற்பாடுகளாக பெண்களுக்கான வாழ்வாதாரத்தை கவனித்தல். பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தல். பெண்களுக்கான தலைமைத்துவத்தை வளர்த்தல். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சட்டஉதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தல். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல். பெண்கள் கௌரவம் பாதிப்புறும் வகையில் செயற்படுபவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்தல். DNA பரிசோதனைகளை துரிதப்படுத்தலும் அதன் பின்னரான வாழ்க்கை படி பெற்றுக்கொடுத்தலும். அரசபொறிமுறைகளுக்கு ( பாதிப்பு ஏற்படும் என கருதின் ) எதிராக குரல் கொடுத்தல். கட்டுரைகள் எழுதுதல். ஆய்வுகளுக்கான தகவல்களை வழங்குதல். பரிந்துரைகளை மேற்கொள்ளல். பாதிக்கப்பட்டோரின் மனநலம் பற்றி கவனம் செலுத்துதல். குடும்ப வன்முறைகள் மீது நடவடிக்கை எடுத்தல். ஆற்றுப்படுத்தல் சேவை போன்றவற்றை குறிப்பிட முடியும்.
இவர் தான் எதிர்நோக்கும் சவால்களைக் கூட பணிபுரிவோர் எதிர்பார்க்கும் சம்பளம், சலுகைகளை வழங்குவதில் ஏற்படும் சிரமம், பெண்ணியலாளர், பெண்ணிய செயற்பாடுகள் என்பவற்றை சமூகம் புரிந்து கொள்ளாமை போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
- [[:பகுப்பு:|இவரது நூல்கள்]]
வளங்கள்
- நூலக எண்: 14175 பக்கங்கள்
- நூலக எண்: 794 பக்கங்கள்
- நூலக எண்: 3746 பக்கங்கள்
வெளி இணைப்புக்கள்
- பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்[[பகுப்பு:]][[பகுப்பு:]]