"நிறுவனம்ːகிளி/ முகைதீன் ஜும்மா பள்ளிவாசல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=கிளி/முக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:54, 9 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிளி/முகைதீன் ஜும்மா பள்ளிவாசல்
வகை பள்ளிவாசல்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி வட்டக்கச்சி சந்தையடி,கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இந்துமா கடல் நடுவே முத்தென விளங்கும் ஈழ நாட்டின் வடபால் அமைந்த இரணைமடு வாவி சூழ் வளம் நிறைந்த கிளிநொச்சி மாநகரில் நெல், தென்னை, மா, பலா முதலிய வளங்களை தன்னகத்தே கொண்ட வட்டக்கச்சியில் சிவசுந்தரம் வீதிப் பகுதியில் 1953 இல் முஸ்லிம் குடியேற்றங்கள் நிலவிய 286 குடும்பங்களில் 20 குடும்பங்கள் முஸ்லிம் குடும்பங்கள் ஆகும்.

1958ஆம் ஆண்டு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தகரக் கொட்டகையில் இரண்டு ஏக்கர் கோயில் காணி 1.5 ஏக்கர் மையவாடி காணியுடன் அமைக்கப்பெற்றது. அப்போதைய தலைவராக கச்சு முகமது, முத்து முகமது ஆகியோர் இருந்தார்கள். 25-10-1996 ஆம் ஆண்டு யுத்தத்தால் மக்கள் வெளியேறியபின் இவ்வாலயம் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் காணப்பட்டது. 2010 ஆம் ஆண்டு முதல் குடியேற்றத்தின் பின்னர் தலைவர் சாருர் அவர்களாலும், செயலாளர் ஏ.ஆர்.உனைஸ் அவர்களாலும், பொருளாளர் ஏ.ஆர். நாசார் அவர்களாலும் மீண்டும் 2016 இல் புத்துயிர் பெற்றது. மௌலவி அஷ்ரப் வழிநடத்துகிறார். தற்போதைய வழிபாட்டு முறை ஐந்து நேர தொழுகை இடம்பெற்று வெள்ளி தொழுகை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகிறது.