"நிறுவனம்ːகிளி/வட்டக்கச்சி தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 22: வரிசை 22:
 
நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக எமது பாடசாலை இடம் பெயர்ந்தது. எமது மாணவர்கள் ,பெற்றோர்கள் ,நலன்விரும்பிகள் என பலரும் போரில் சிக்குண்டு மாண்டு போயினர் மற்றும் காயமடைந்தனர். பின்னர் 26-04-2010 ஆம் திகதி மீளவும் சொந்த இடத்தில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது.
 
நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக எமது பாடசாலை இடம் பெயர்ந்தது. எமது மாணவர்கள் ,பெற்றோர்கள் ,நலன்விரும்பிகள் என பலரும் போரில் சிக்குண்டு மாண்டு போயினர் மற்றும் காயமடைந்தனர். பின்னர் 26-04-2010 ஆம் திகதி மீளவும் சொந்த இடத்தில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது.
 
இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்த அதிபர்கள்  
 
இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்த அதிபர்கள்  
01 திருமதி த .சிவசுப்பிரமணியம் 19-9-1963 தொடக்கம் 31-12-1963
+
01 திருமதி த .சிவசுப்பிரமணியம் 19-9-1963 தொடக்கம் 31-12-1963,
02 திரு ஆ.அருளம்பலம் 01-01-1964 தொடக்கம் 31-05-1965
+
02 திரு ஆ.அருளம்பலம் 01-01-1964 தொடக்கம் 31-05-1965,
03 திருமதி த .சிவசுப்பிரமணியம் 01-06-1965 தொடக்கம் 31-01-1966  
+
03 திருமதி த .சிவசுப்பிரமணியம் 01-06-1965 தொடக்கம் 31-01-1966,
04 திரு.ச.பொ.அழகரத்தினம் 01-02-1966 தொடக்கம்  31-12-1971
+
04 திரு.ச.பொ.அழகரத்தினம் 01-02-1966 தொடக்கம்  31-12-1971,
05 திருமதி கெள . குமாரசாமி  01-01-1972 தொடக்கம் 22-03-1972
+
05 திருமதி கெள . குமாரசாமி  01-01-1972 தொடக்கம் 22-03-1972,
06 திரு நா.கந்தையா  23-03-1972 தொடக்கம் 29-08-1978
+
06 திரு நா.கந்தையா  23-03-1972 தொடக்கம் 29-08-1978,
07 திருமதி த .சிவசுப்பிரமணியம் 06-03-1978 தொடக்கம் 08-02-1979
+
07 திருமதி த .சிவசுப்பிரமணியம் 06-03-1978 தொடக்கம் 08-02-1979,
08 திருமதி மு.நாகமணி  09-02-1979 தொடக்கம் 05-03-1982
+
08 திருமதி மு.நாகமணி  09-02-1979 தொடக்கம் 05-03-1982,
09 திருமதி த .சிவசுப்பிரமணியம் 06-03-1982 தொடக்கம் 06-09-1983
+
09 திருமதி த .சிவசுப்பிரமணியம் 06-03-1982 தொடக்கம் 06-09-1983,
10 திரு க. சிவசாமி  07-09-1983 தொடக்கம் 13-03-1984
+
10 திரு க. சிவசாமி  07-09-1983 தொடக்கம் 13-03-1984,
11 திருமதி த .சிவசுப்பிரமணியம் 14-03-1984 தொடக்கம் 23-11-1995
+
11 திருமதி த .சிவசுப்பிரமணியம் 14-03-1984 தொடக்கம் 23-11-1995,
12 திரு மா. சிவனேசன் 24-11-1995 தொடக்கம் 07-02-1996
+
12 திரு மா. சிவனேசன் 24-11-1995 தொடக்கம் 07-02-1996,
13 திரு அ.அமிர்தலிங்கம் 08-02-1996 தொடக்கம் 31-01-1997
+
13 திரு அ.அமிர்தலிங்கம் 08-02-1996 தொடக்கம் 31-01-1997,
14 திரு மா. சிவனேசன் 01-02-1997 தொடக்கம் 08-01-20002
+
14 திரு மா. சிவனேசன் 01-02-1997 தொடக்கம் 08-01-20002,
15 திரு ஆ.உதயணன் 09-01-2002 தொடக்கம் 10.02.2015
+
15 திரு ஆ.உதயணன் 09-01-2002 தொடக்கம் 10.02.2015,
 
   
 
   
 
பொன்விழா மலர் (1963-2013) வெளியிடப்பட்டது ஒரு சிறப்பம்சம் ஆகும்.
 
பொன்விழா மலர் (1963-2013) வெளியிடப்பட்டது ஒரு சிறப்பம்சம் ஆகும்.

02:42, 9 டிசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

பெயர் கிளி/வட்டக்கச்சி தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி வட்டக்கச்சி,கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

1954 ஆம் ஆண்டு தொடங்கிய வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தில் தெற்குப்பகுதி மாணவர்களின் நலன் கருதி கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அப்பகுதி மக்களும் ஒரு பாடசாலையை நிறுவ ஆவல் கொண்டனர். அதற்கமைய அரச பாவனை காணி ஒன்றை தெரிவு செய்தனர். எனினும் அக்காணி பெரும் பற்றைக் காடாக இருந்தமையால் அதை துப்பரவு செய்ய காலதாமதம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு மிக அண்மையில் இருந்த 36 ஆம் இலக்கத்தை உடைய திரு. சி கணபதிப்பிள்ளை என்பவர் உடைய காணியின் முன் பகுதியில் ஒரு கீற்றுக் கொட்டகையை உருவாக்கிக் கொண்டனர். அதன் பயனாய் 11.06.1956 ஆம் ஆண்டு 04 ஆசிரியர்களுடனும் 41 மாணவர்களுடனும் அம்பாள் பாடசாலை என்ற பெயருடன் ஒரு பாடசாலை உதயமானது.

ஆரம்பகால கடமை நிறைவேற்று அதிபராக செல்வி தங்கம்மா கந்தையா என்பவர் பணிபுரிய, ஆசிரியர்களாக செல்வி வள்ளியம்மை சுப்பிரமணியம், செல்வி இராசேஸ்வரி சிவக்கொழுந்து, திரு தம்பையா கோபாலபிள்ளை ஆகியோர் பணியாற்றினர். இவ்வாறு இயங்கிவரும் காலப்பகுதியில் அரச காணியில் காடுகள் அழிக்கப்பட்டு 90X20 அளவில் நிரந்தர மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு தைத்திங்கள் 14 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று மக்கள் மாணவர்கள் அணி திரள அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் புடைசூழ அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்களுடனும் 08 ஆசிரியர்களுடனும் பாலர் கீழ் பிரிவு தொடக்கம் 08 ஆம் வகுப்பு வரை வட்டக்கச்சி தெற்கு அம்பாள் பாடசாலை என்ற பெயருடன் இயங்கி வந்துள்ளது .

இப்பாடசாலை உதயமாவதற்கு அயராது உழைத்த அன்றைய கிராம முன்னேற்றச்சங்க பெரியவர்களான திரு.சி.சிவக்கொழுந்து, திரு.சி.கந்தையா, திரு.வ.கைலாயபிள்ளை, திரு.த.மார்க்கண்டு, திரு.சி.கணபதிப்பிள்ளை, திரு.ஆ.நடேசன் ஆகியோர் என்றும் நன்றிக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

பாடசாலையின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் கிராம முன்னேற்ற சங்கத்தினரின் விடாமுயற்சி, அதிபர், ஆசிரியர்களின் பங்களிப்பும் காரணமாகும். இதன் விளைவாக 1963 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 19 ஆம் திகதியன்று 08 ஆசிரியர்களுடனும் 240 மாணவர்களுடனும் வட்டக்கச்சி தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது

நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக எமது பாடசாலை இடம் பெயர்ந்தது. எமது மாணவர்கள் ,பெற்றோர்கள் ,நலன்விரும்பிகள் என பலரும் போரில் சிக்குண்டு மாண்டு போயினர் மற்றும் காயமடைந்தனர். பின்னர் 26-04-2010 ஆம் திகதி மீளவும் சொந்த இடத்தில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்த அதிபர்கள் 01 திருமதி த .சிவசுப்பிரமணியம் 19-9-1963 தொடக்கம் 31-12-1963, 02 திரு ஆ.அருளம்பலம் 01-01-1964 தொடக்கம் 31-05-1965, 03 திருமதி த .சிவசுப்பிரமணியம் 01-06-1965 தொடக்கம் 31-01-1966, 04 திரு.ச.பொ.அழகரத்தினம் 01-02-1966 தொடக்கம் 31-12-1971, 05 திருமதி கெள . குமாரசாமி 01-01-1972 தொடக்கம் 22-03-1972, 06 திரு நா.கந்தையா 23-03-1972 தொடக்கம் 29-08-1978, 07 திருமதி த .சிவசுப்பிரமணியம் 06-03-1978 தொடக்கம் 08-02-1979, 08 திருமதி மு.நாகமணி 09-02-1979 தொடக்கம் 05-03-1982, 09 திருமதி த .சிவசுப்பிரமணியம் 06-03-1982 தொடக்கம் 06-09-1983, 10 திரு க. சிவசாமி 07-09-1983 தொடக்கம் 13-03-1984, 11 திருமதி த .சிவசுப்பிரமணியம் 14-03-1984 தொடக்கம் 23-11-1995, 12 திரு மா. சிவனேசன் 24-11-1995 தொடக்கம் 07-02-1996, 13 திரு அ.அமிர்தலிங்கம் 08-02-1996 தொடக்கம் 31-01-1997, 14 திரு மா. சிவனேசன் 01-02-1997 தொடக்கம் 08-01-20002, 15 திரு ஆ.உதயணன் 09-01-2002 தொடக்கம் 10.02.2015,

பொன்விழா மலர் (1963-2013) வெளியிடப்பட்டது ஒரு சிறப்பம்சம் ஆகும்.