"ஆளுமை:நீக்கிலஸ், அந்தோனிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(" {{ஆளுமை1| பெயர்=நீக்கிலஸ்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:03, 14 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | நீக்கிலஸ் |
தந்தை | அந்தோனிப்பிள்ளை |
தாய் | மேரிமார்கிரேட் |
பிறப்பு | 1936.08.03 |
ஊர் | கிளிநொச்சி, புலோப்பளை |
வகை | ஒப்பனைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நீக்கிலஸ், அந்தோனிப்பிள்ளை (1936.08.03 - ) கிளிநொச்சி, புலோப்பளை கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட ஒப்பனைக் கலைஞர். இவரது தந்தை அந்தோனிப்பிள்ளை; தாய் மேரிமார்கிரேட். இவர் தனது ஆரம்பக் கல்வியை புனித பத்திரிசியார் கல்லூரியில் மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பூந்தோன் ஜோசப்பிடம் தொடர்ச்சியாக 16 வருடங்கள் கூத்துக்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பு யாவரையும் கவர்ந்தது. பிற்காலங்களில் நாடகங்கள் பற்றி மேலும் மெருகூட்டும் வகையில் ஞானசவுந்தரி, கற்பகமலா, ஒற்றைக் கண்ணன், அம்மா போன்ற நாடகங்களில் நடித்து தனது கலை முயற்சியை பளைப்பிரதேசங்களுக்கு வழங்கி வருகிறார். தனது சொந்த முயற்சியால் நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தார். ஒற்றைக் கண்ணன், அம்மா போன்ற நாடகங்களை இவர் எழுதி நெறியாள்கை செய்தார்.
2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் பச்சிலைபள்ளி பிரதேச செலகத்தால் கௌரிவிக்கப்பட்டுள்ளார். இவரது நடிப்பு, ஒப்பனை மற்றும் திறமையைப் பாராட்டி பாரம்பரிய கலைகள் மேம்பாட்டு பேரவையால் கௌரவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.