"ஆளுமை:ஏழுமலைப்பிள்ளை, வல்லிபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 4: | வரிசை 4: | ||
தாய்=பாக்கியம்| | தாய்=பாக்கியம்| | ||
பிறப்பு=1953.11.05| | பிறப்பு=1953.11.05| | ||
− | இறப்பு= | + | இறப்பு=| |
ஊர்=கிளிநொச்சி, மலையாள்புரம்| | ஊர்=கிளிநொச்சி, மலையாள்புரம்| | ||
வகை=பல்துறைக் கலைஞர்| | வகை=பல்துறைக் கலைஞர்| |
00:14, 14 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஏழுமலைப்பிள்ளை |
தந்தை | வல்லிபுரம் |
தாய் | பாக்கியம் |
பிறப்பு | 1953.11.05 |
ஊர் | கிளிநொச்சி, மலையாள்புரம் |
வகை | பல்துறைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஏழுமலைப்பிள்ளை, வல்லிபுரம் அவர்கள் (1953.11.05 - ) இல் யாழ்ப்பாணத்தில் மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட பல்துறைக் கலைஞர் (சினிமா வானொலி உட்பட) ஆவார். இவரது தந்தை வல்லிபுரம்; தாய் பாக்கியம். ஆரம்பக்கல்வியை மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை காங்கேசன்துறை அமெரிக்கன் கல்லூரியிலும் தொடர்ந்தார். அக்கல்லூரியில் உயர் கல்வியை ஆங்கில பிரிவாக தரம் உயர்த்தப்பட்ட போது அங்கேயே கற்றுக்கொண்டார். உயர்தரத்தில் அரசியல், வரலாறு, இலக்கியம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் திறமையை பெற்றார். அக்கால போர்ச்சூழல் காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பினை மறுத்தார்.
பாடசாலை ஆண்டு விழாக்களில் மேடையேற்றப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், சாம்ராட் அசோகன், ஓதெல்லோ, வெனிஸ் நகர வணிகன், மார்க் அன்ரனி ஆகிய நாடகங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றவர். காங்கேசன்துறை இளந்தமிழர் மன்றம், மாவிட்டபுரம் முத்தமிழ்க் கலை மன்றம், மயிலிட்டி இலங்கேஸ்வரன் நாடக மன்றம், டெல்லி ஒரு நாடக மன்றம், கட்டுவன் பாலர் ஞானோதயா நாடக மன்றம், மட்டக்களப்பு காரைதீவு கலை ஒன்றியம் போன்ற நாடக மன்றகளுடன் இணைந்து கலைஞர் செயற்பட்டார்.
தண்ணீரும் சுடும், பாஞ்சாலி சபதம், நீலக்கல், வன்தொண்டன், ஏன்இந்த அவலம், இரு ஜீவன்கள், தனிமரம், மகுடபங்கம், கடமை, கலையும் கண்ணீரும், நடுகல், மனோகரா ,சாக்ரடீஸ், எல்லாளன், பண்டாரவன்னியன், போன்ற நாடகங்கள் இவ்வாறு இவர் நடித்த நாடகங்களுள் சிலவாகும்.
வெனிஸ் நகர வணிகன் வட்டார நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்றதுடன் சிறந்த நடிகருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1969 இல் ஐநா சபையின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பேச்சு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்.