"ஆளுமை:வேலுப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை1| பெயர்=வேலுப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

23:37, 13 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேலுப்பிள்ளை
தந்தை சிதம்பரப்பிள்ளை
தாய் பரமேஸ்வரியம்மா
பிறப்பு 1935-06-30
இறப்பு 2019-12-24
ஊர் கிளிநொச்சி, வட்டக்கச்சி
வகை வட்டக்கச்சி மூத்த குடியினர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை அவர்கள் (1935-06-30 - 2019-12-24 ) யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு, புத்தூரை பிறப்பிடமாகக் கொண்ட வட்டக்கச்சி மூத்த குடியினர் ஆவார். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை; தாய் பரமேஸ்வரியம்மா. 1953ஆம் ஆண்டு மற்றும் 1954 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட்டக்கச்சி கிராமம் குடியேற்றப்பட்ட போது சகோதரனுக்கு துணையாக தனது 18 வயதில் கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேற்றினார்.

பயன் தரு மரங்களை நாட்டி வட்டக்கச்சியின் அழக்கினை மெருகூட்டினார். இவருக்கு வட்டக்கச்சி கண்டாவளை பிரதேச தபாலதிபர் வேலை கிடைத்தது. வட்டக்கச்சி தபாலகர்கள் தங்கும் விடுதியில் குடியேறினார். 1967 ஆம் ஆண்டு செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் புத்திரியான இராயேஸ்வரியை இவருக்கு மணம் முடித்து கொடுத்தனர். அமிர்தவாணி, கலாவாணி, சிவேசனராஜ், அருள்ராஜ் மற்றும் லலிதாவாணி ஆகியோரை பிள்ளைச்செல்வமாக பெற்றார்.

அரசியல் காரணங்களால் தபாலதிபர் வேலையை துறந்து கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் பிரதம இலிகிதகாராக வேலையை பொறுப்பேற்றார். பின்னர் வட்டக்கச்சியில் காணி வாங்கி வீடொன்று கட்டி குடியேறினார். யுத்தத்தின் பின்னர் நாட்டு பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றார்.

அவரின் வயது மூப்பு மற்றும் இறுதிப் போரின் போது காலில் ஏற்பட்ட முறிவிற்காக சத்திர சிகிச்சையால் நடமாட முடியாத சூழ்நிலையினாலும் அவர் 24-12-2019 அன்று இயற்கை எய்தினார்.