"ஆளுமை:ரத்தினம், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=ரத்தினம்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:14, 14 செப்டம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ரத்தினம் |
தந்தை | சின்னத்தம்பி |
தாய் | - |
பிறப்பு | 1932 |
ஊர் | ஞானி மடம் |
வகை | கூத்து கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரத்தினம்,சின்னத்தம்பி (1932 -)கிளிநொச்சி, ஞானிமடத்தை பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர் ஆவார். இவரது தந்தை சின்னத்தம்பி ஆவார். இவர் தான் 1932 ஆண்டு பிறந்ததாகவும் ஆனால் தனது பதிவுகள் அனைத்திலும் 1934-ஆம் ஆண்டு என்று தவறாக குறிப்பிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இவர் அண்ணாவி துரைசாமி இடம் இருந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களைக் கொண்டு மார்க்கண்டேய புராணம் ,அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி முதலான இசை நாடகங்களை நெறியாள்கை செய்து மேடையேற்றி பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.
பாடசாலை மட்ட தமிழ்த்தினப் போட்டிகளுக்கும் பொதுவான விழாக்களுக்கும் நாடகங்களை உருவாக்கி மேடை ஏற்றியும் வந்துள்ளார். மிருதங்கம் வாசிப்பதிலும் பிற் பாட்டு பாடுவதிலும் திறமையானவராக இருந்தமையால் அயல் கிராமமான கறுக்கா தீவு, தம்பையா துரைசாமி அண்ணாவியின் காத்தான்கூத்து, இசைநாடகங்கள், புராணநாடகங்கள், பொம்மையாட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம் என்பவற்றிற்கு இவருடைய மிருதங்கம் வாசிப்பவராகவும், பிற்பாட்டுக்குரல் கொடுப்பவராகவும் இருந்தமையால் இவரும் நெருங்கிய நண்பர்களாய் கலை உலகில் வலம் வந்தார்கள். அத்தோடு அக்காலத்து அண்ணாவி விசுவலிங்கம் அவர்களின் கால விருட்சம் நாடகத்தில் அர்ஜுனன் பாத்திரம் ஏற்று நடித்துமுள்ளார்.
2014 ஆம் ஆண்டு கண்களில் பார்வை குறைந்து வருவதாகவும் ஞாபக சக்தியை நாளாந்தம் இழந்து வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இவருடைய கலை பணியினை கௌரவித்து பாராட்டும் முகமாக இலங்கை அரசின் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 2004ஆம் ஆண்டு கலாபூஷண விருதும், 2011 ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவையினால் கலைக்கிளி விருதும், அதே ஆண்டில் பூநகரி பிரதேச செயலகத்தின் கலாச்சார பேரவையினால் கலைநகரி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.