"ஆளுமை:சுப்பையா, சண்முகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=செல்வராசா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:23, 9 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | செல்வராசா |
தந்தை | சின்னையா |
தாய் | லீலாவதி |
பிறப்பு | 1970.05.02 |
ஊர் | கிளிநொச்சி, முகமாலை |
வகை | நாடகக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பையா, சண்முகம் (1925 - ) கிளிநொச்சி, ஞானிமடத்தைச் சேர்ந்த கூத்துக்கலைஞர். இவரது தந்தை சண்முகம். விரதம் இருந்து கூத்தினை பழக்குவதும் மேடை ஏற்றுவதும் இவருக்கே உரித்தான தனித்துவப்பாங்கு . பக்தி நிறைந்த அண்ணாவியாராக கருதப்பட்டார். தனது வீட்டு வளவுடன் கோயிலும் வைத்து பராமரித்து பூஜை செய்து வந்தார்.
செட்டியார் குறிஞ்சி மக்களை கொண்டு காத்தான் கூத்தினை பழக்கி செல்லியம்மன் கோயில், மட்டுவில் நாடு மேற்கு என்று பதினைந்து மேடைகளுக்கு மேல் கூத்தினை அரங்கேற்றியுள்ளார். இவர் காத்தான்கூத்தில் பாத்திரம் ஏற்று நடிப்பது சிறப்பானது. இவர் தனக்கே உரித்தான மெட்டு ராகம் இசைப்பதன் மூலம் மக்களை அவர்பால் ஈர்த்ததுக் கொண்டார். சிறுவயதிலிருந்தே காத்தான் கூத்தினை கற்றுக் கொண்டதால் காத்தான் கூத்து பயபக்தி உள்ளவராக இருந்தார்.
காத்தான் கூத்தில் பாத்திரம் ஏற்று நடிப்பவர்களுக்கு காப்பு கட்டுதல் முக்கியமான நிகழ்வாக இருக்கும் .காப்பு கட்டுதல் என்பது அண்ணாவியார் காப்பு சொல்லிக் கொடுக்கும் போது கூத்தாடுபவர்கள் அவற்றை அண்ணாவி பாடுவது போல் பாடுவார்கள். காப்புகட்டி தான் பழக்கம் தொடங்கும் மாமிசம் உண்ணுதல் கூடாது தூரப் பயணங்கள் தவிர்க்கப்படவேண்டும் வீடுகளுக்கு செல்லக்கூடாது காப்பு கட்டிய பிற்பாடு இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால் நடிப்பவர்களுக்கு ஆபத்து வரும் என்பது நம்பிக்கை .
1993ஆம் ஆண்டு தமிழ் தின போட்டிக்கான காத்தான் கூத்தினை இவர் பழக்கியதில் கோட்ட மட்டத்தில் முதலிடமும் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார். மேலும் காத்தான்கூத்துக்கு உயிர்நாடியான நடன தாளம் உடுக்கடிப்பு பாடல் என்பன இவருடைய அண்ணாவி தன்மையின் அதி சிறப்பு நிலை ஆகும்.