"ஆளுமை:சவிரி, பூலோகராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=பூலோகராஜா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:36, 9 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பூலோகராஜா |
தந்தை | சவிரி |
தாய் | அன்னம்மா |
பிறப்பு | 1967.01.06 |
ஊர் | கிளிநொச்சி, வட்டக்கச்சி |
வகை | அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பூலோகராஜா, சவிரி (1967.01.06 - ) மன்னார், உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது தந்தை சவிரி; தாய் அன்னம்மா. இவர் மன்/ உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், கிளி/ தர்மபுரம் மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும், உயர்தரத்தை கிளி/ முருகானந்தா கல்லூரியிலும் கற்றுப் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டமும், முதுகலைமாணி பட்டமும், தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா, பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் கல்வி முகாமைத்துவம் பட்டமும் பெற்றுக் கொண்டதுடன் தற்போது தேசிய கல்வி நிறுவகத்தில் கற்றுக்கொண்டிருக்கிறார்.
இவர் கிளி/தருமபுரம் மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகவும், பரந்தன் தொலைக்கல்வி மத்திய நிலையத்தில் சிரேஸ்ட போதனா ஆசிரியராகவும், பின்னர் கிளி/தருமபுரம் மத்திய கல்லூரி,கிளி வட்டக்கச்சி மத்திய கல்லூரி ஆகியவற்றில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். 2020 ம் ஆண்டு தொடக்கம் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில்(தேசிய பாடசாலையில்) அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
இவர் கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தின் வட்டக்கச்சி கிளையின் தலைவராகவும், வட்டக்கச்சி ஐக்கிய நற்பணி மன்றத்தின் தலைவராகவும்,கலைவாணி சனசமுக நிலையத்தின் தலைவராகவும், கரைச்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உபதலைவராகவும, வட்டக்கச்சி கல்வி நிதியத்தின் உபதலைவராகவும், கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கத்தின் தலைவராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருந்து பல்வேறு சமுகப் பணிகளை ஆற்றி வருகின்றார்.
இவர் சிறந்த அதிபர் பணிக்காக 2010 ஆம் ஆண்டு சிறந்த அதிபர்க்கான குரு பிரதீபா பிரபா விருதை அப்போதைய ஜனாதிபதி மாண்புமிகு மகிந்தராஜபக்ச அவர்களின் கையாலும் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டிலும் சிறந்த அதிபருக்கான அதே விருதை அப்போதைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் கையாலும் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.