"ஆளுமை:கஜானன், செல்வராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கஜானன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:33, 7 செப்டம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

பெயர் கஜானன்
தந்தை செல்வராசா
தாய் கருணாதேவி
பிறப்பு 1993.01.08
ஊர் கிளிநொச்சி, முரசுமோட்டை
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கஜானன், செல்வராசா (1993.01.08 - ) கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராசா; தாய் கருணாதேவி.இவர் தனது ஆரம்பக் கல்வியை இடப்பெயர்வின் நிமிர்த்தம் வன்னிப் பெருநிலப்பரப்பின் ஆனைவிழுந்தான் அ.த.க பாடசாலையிலும்,ஐயனார் புரம் அ.த.க பாடசாலையிலும் கற்றார் தொடர்ந்து கிளி/பளை றோ.க.த.க பாடசாலையிலும் கிளி/பளை மத்திய கல்லூரியிலும் கற்று,உயர் கல்வியை கிளி/மத்திய கல்லூரி மற்றும் யாழ்/பரியோவான் கல்லூரிகளிலும் கற்று,பட்டப்படிப்பை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்திலும் பயின்றார்இவரது தந்தையாரின் தந்தையார் ஆறுமுகம்(விசகடி பொன்னர்) நாட்டு வைத்தியத்தில் தேர்ச்சிபெற்றவர்.

குடும்பச்சூழல் கலைத்துறை சார்ந்ததால் இளமையிலேயே பேச்சுப்போட்டி விவாதப்போட்டி,ஓவியப்போட்டி,நாடகப்போட்டி போன்றவற்றில் சாதித்த இவர் 2008 இல் நடைபெற்ற ஓவியப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும்,2011 இல் நடைபெற்ற நாடகப் போட்டியில் மாகாண ரீதியில் மூன்றாம் இடத்தையும் பாடசாலை காலத்தில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பரியோவான் கல்லூரியில் 2010 இல் உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கும் போது ஆரம்பித்த எழுத்துப் பயணம் பாடசாலை மட்டத்தில் வெற்றிகளை தேடிக்கொடுத்ததோடு 2011 இல் மொறட்டுவ தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட கவிதை விவாத போட்டிகளில் மாவட்ட நிலைகளில் முதலிடங்களை பெற்று படிப்படியாக தேசிய கலை இலக்கிய போட்டிகளிலும் திறந்த பிரிவில் மாவட்ட நிலைகளில் வெற்றிபெற வைத்தது அதனைத் தொடர்ந்து 2015 இல் தனது முதலாவது கவிதைத் தொகுப்பான கனவுகளின் புலர்வு எனும் நூலையும் 2016 இல் வழி(ளி) தேடும் புல்லாங்குழல் எனும் கவிதை தொகுப்பு நூலையும் வெளியிட்டார்.2016 இல் மாவட்டச் செயலக கலாசார விழாவில் இளங்கலைஞராக கௌரவிக்கப்பட்டார்.தொடர்ந்து பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவந்த இவர் அகரம் கவின்கலை கலாமன்றத்தை நிறுவி எழுத்துத் துறையை இளையோரிடம் வளர்த்து வந்தார்.பாடசாலைகளுக்கிடையில் மொறட்டுவ தமிழ்சங்கத்தால் தடத்தப்படுகின்ற விவாதப் போட்டிகளின் நடுவராகவும்,பிற போட்டிகளின் நடுவராகவும் செயற்பட்டு வருகிறார். 2018 இல் நடைபெற்ற தேசிய கலை இலக்கிய போட்டியில் பாடலாக்கத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றார் தொடர்ந்து 2018இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார் 2019 இல் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பாடலாக்கப் போட்டியில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்று தேசிய இளைஞர் விருதினைப் பெற்றார்.2019 இல் பச்சிலைப்பள்ளி பிரதேச கீதத்தினை எழுதி ஒலி ஒளி வடிவமாக வெளியீடு செய்தார்.தொடர்ந்தும் எழுத்துத்துறையில் தன் பயணத்தை தொடர்கிறார்.

ஆற்றும் பணிகள்/சேவைகள்-அகரம் கவின்கலை கலாமன்ற நிர்வாக இயக்குனர் மத்தியஸ்தர்,மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு,நிலஅளவை உதவியாளர்,நில அளவை திணைக்களம் கலைத்துறை- எழுத்துத்துறை(கவிதை,பாடலாக்கம் பெற்ற விருதுகள்-இளங்கலைஞர் விருது(கவிதை கலைத்துறை),தேசிய இளைஞர் விருது (பாடலாக்கம்) பெற்றுள்ளார். இவ்வாறாக பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார்.