"ஆளுமை:விந்தன், செல்லத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=விந்தன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

03:59, 1 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் விந்தன்
தந்தை செல்லத்துரை
தாய் -
பிறப்பு 1960.11.18
ஊர் கிளிநொச்சி
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விந்தன், செல்லத்துரை (1960.11.18 -) கிளிநொச்சி மானடித்த குளம், கண்டாவளையை சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் ஆரம்ப, இடைநிலைக்கல்வியை ஊரின் பழமையான கிளி/கண்டாவளை மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ்/சாவக்கச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

இவர் தற்போது கிளிநொச்சி வலய கல்விப்பணிமனையில் முன்பள்ளிக்கான உதவிக் கல்வி பணிப்பாளராக சேவையாற்றி வருகின்றார். இவர் 1991, 1992 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சந்தனக்காடு", "இப்போதைக்கு ஏது வழி" போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் அதன் பண்பாட்டுப் பேரவையும் வெளியிட்டிருந்த "கிளிநொச்சி மாவட்ட தொன்மையின் மூலங்கள்" எனும் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல் தொகுதியில் "கிளிநொச்சி மாவட்டத்தின் நாடக வரலாறு பற்றிய விபரங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்றை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 30-31