"ஆளுமை:நித்தியானந்தன், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நித்தியானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

04:02, 31 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் நித்தியானந்தன்
தந்தை கார்த்திகேசு
தாய் -
பிறப்பு 1947.10.17
ஊர் கிளிநொச்சி
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நித்தியானந்தன், கார்த்திகேசு (1947.10.17-) புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி சேற்றுக்கண்டி கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு.

இவர் ஆரம்பக்கல்வியை புங்குடுதீவு பராசக்தி வித்தியாலயத்தில் கற்றார். இவர் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், கந்த புராணம் ஆகியவற்றை விரும்பி பயின்று முரசுமோட்டை அம்மன் சந்நிதியில் முழுமையான ஈடுபாட்டுடன் பயின்றும் ஏனையோருக்கு பயிற்றுவித்தும் வந்தார். அம்மன் ஆலயத்தில் தேவார திருமுறைகளை நேர்த்தியாக இசைத்தும், திருத்தொண்டர் புராணத்தை ஓதியும் வருகின்றார். நாயன்மார்களின் குருபூசை தினங்களில் சகல திருமுறைப்பாக்களையும் கிரமமாக ஓதியும் வந்துள்ளார்.

1956 இல் விவசாயத்தை தொழிலாக மேற்கொண்டார். இவர் தமது அதிக காலப்பகுதியை சமயப்பணி ஆற்றுவதிலும், ஓதுவராக தொழிற்படுவதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

2013 இல் பரந்தன் பகுதியில் நடாத்திய கலாசார விழாவில் 'கலை ஒளி' விருதினை பெற்றுக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 14-15