"ஆளுமை:சிவநேசன், சிவநாமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 18: | வரிசை 18: | ||
{{வளம்|15444|163}} | {{வளம்|15444|163}} | ||
{{வளம்|14671|03-05}} | {{வளம்|14671|03-05}} | ||
+ | [[பகுப்பு:அரியாலை ஆளுமைகள்]] |
22:56, 12 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவநேசன் |
தந்தை | சிவநாமம் |
பிறப்பு | 1946.05.13 |
ஊர் | அரியாலை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவநேசன், சிவநாமம் (1946.05.13 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவநாமம். இவர் இளம் பராயத்திலிருந்தே நாடகக் கலையில் ஆற்றல் கொண்டு கதாநாயகன், கதாநாயகி, குணச்சித்திர பாத்திரங்கள் என எல்லாப் பாத்திரங்களிலும் நாடகங்களில் நடித்துள்ளார்.
இவர் சுண்டுக்குளி யாழ்ப்பாண நாடகக் கலாமன்றத்தின் நீண்ட கால உறுப்பினராக இருந்து பெண் பாத்திரங்களில் நடித்துப் பல சாதனைகளை நிகழ்த்தியதுடன் மேற்படி நாடகமன்றத்தின் அடங்காப் பிடாரி என்னும் நகைசுவை நாடகத்தில் 1500 தடவைகளுக்கு மேல் மேடையேறி நடித்துள்ளார். மேலும் பாமாவிஜயம், ஏழு பிள்ளை நல்லதங்காள், குற்றம் எங்கே போன்ற நாடகங்களையும் நடித்துள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு அல்வாய் சாமணந்துறை பாலவினாயகர் மீது எழுதிய திருப்பள்ளி எழுச்சி குறுந்தட்டு வெளியீட்டின் போது ஆலய நிர்வாகத்தினரால் பொன்னடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 168
- நூலக எண்: 15444 பக்கங்கள் 163
- நூலக எண்: 14671 பக்கங்கள் 03-05