"ஆளுமை:கமலாசினி, பொன்னப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 18: வரிசை 18:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

13:30, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் கமலாசினி, பொன்னப்பா
தந்தை மருதப்பு
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1902.06.31
இறப்பு 1975.04.16
ஊர் வேலணை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலாசினி, பொன்னப்பா (1902.06.31- 1975.0416) வேலணையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை மருதப்பு; தாய் சின்னத்தங்கம். ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்கமிசன் பாடசாலையிலும் உயர்கல்வியை உடுவில் மகளீர் கல்லூரியிலும் கற்றார். செல்லம்மா என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், வாத்தியம்மா என்றே பலராலும் அறியப்பட்டார். மிஷன் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் தனது பெயரினைக் கமலாசினி என மாற்றிக்கொண்டார்.

தனது 14 ஆவது வயதில் வேலணை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்து 42 வருட காலம் பணியை மேற்கொண்டார். மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும் வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார். இவர் கல்விப் பணியோடு சமயப் பணியையும் மேற்கொண்டார். தென்னிந்திய திருச்சபையின் வேலணை தேவாலய ஆயுட் கால உறுப்பினராகவும் மேற்பாளராகவும் பணியாற்றினார். திருச்சபை வைகாசி மாதம் தோறும் மானிப்பாயில் நடத்தும் விசேட ஆராதனையிலும் தவறாது கலந்து கொள்வார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 295-297