"நிறுவனம்:யாழ்/ வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 25: | வரிசை 25: | ||
*[http://www.thejaffna.com/temples/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில்] | *[http://www.thejaffna.com/temples/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AE பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில்] | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை கோயில்கள்]] |
13:28, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வேலணை |
முகவரி | பெருங்குளம், வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை என்னும் இடத்திலே அமைந்துள்ளது. இங்கு முத்துமாரி என்ற மூர்த்தத்திலே அம்பிகை விளங்குகின்றார். மிக புராதன ஆலயமாக கருதப்படும் இவ் ஆலயத்தின் கர்ப்பக்கிரகம் 1875 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக அரசாங்க பதிவுகளிலிருந்து அறியமுடிகிறது.
இவ் ஆலயத்துக்கான ஆரம்பக் கட்டடம் காசித்தம்பி வள்ளல் அவர்களால் நிர்மானிக்கப்பட்டது. ஆரம்பகாலங்களில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இவ் ஆலயத்தில் மிருகபலியிட்டு வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. 1875ஆம் ஆண்டளவில் யாதவராயர் இராமநாதர் என்னும் வள்ளலார் தூபி, அர்த்த மண்டபம், சபாமண்டபம், மாமண்டபம், ஆகியவற்றுடன் கூடிய புதிய கட்டடத்தை நிறுவினார்.
1951 ஆம் ஆண்டிலே மும்மணிகளாகிய திரு. க. சோமசுந்தரப்புலவர் அவர்களும் பண்டிதமணி பிரம்மசிறீ சு. நவநீதகிருஷ்ண பாரதியார் அவர்களும், வித்துவசிரோமணி பிரம்மசிறீ சி. கணேசையர் அவர்களும் இவ் ஆலயத்தின் மீது பல தோத்திரங்களை அருளியுள்ளார்கள். இராஜகோபுரம் அமைக்கப்பட்டு 2010ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 55-67